இந்தியா வைத்த கெடு.. அவசர அவசரமாக வாகா எல்லையை நோக்கி செல்லும் பாகிஸ்தானியர்கள்!

Pakistanis Flee India Amidst 48 Hour Expulsion Deadline | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஏப்ரல் 24, 2025 அன்று இந்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக ஏராளமான பாகிஸ்தானியர்கள் வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

இந்தியா வைத்த கெடு.. அவசர அவசரமாக வாகா எல்லையை நோக்கி செல்லும் பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

Updated On: 

26 Apr 2025 08:03 AM

வாகா, ஏப்ரல் 25 : இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் (Pakistan Natives) 48 மணி நேரத்திற்குள்ளாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஏப்ரல் 24, 2025 அன்று இந்திய அரசு திட்டவட்டமாக அறிவித்த நிலையில், நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் (India – Pakistan Border) குவிந்து வருகின்றனர். ஏப்ரல் 27, 2025 முதல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் விசா ரத்து செய்யப்படும் என இந்தியா அரசு அறிவித்திருந்த நிலையில், ஏராளமான பாகிஸ்தானியர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தானியர்களின் வெளியேற்றம் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஜம்மு & காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட 26 சுற்றுலா பயணிகள்

ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்தது தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரெண்ட் (The Resistance Front) பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இந்த கொடூர தாக்குதலில், பஹல்காம் பகுதியில் இருந்த 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், பாகிஸ்தான் மீது கடும் கோபம் கொண்ட இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அட்டாரி வாக எல்லை மூடல், சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டு வருகிறது.

அட்டாரி – வாகா எல்லை மூடல்

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு விதித்த இந்தியா

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியா, பாகிஸ்தானியர்கள் அடுத்து 48 மணி நேரத்திற்குள்ளாக இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஏப்ரல் 24, 2022 அன்று அறிவித்தது. மேலும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படும் என்றும், மருத்துவ காரணங்களுக்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏப்ரல் 29, 2025 முதல் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது. எனவே இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்களது விசாக்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக ஏராளமான பாகிஸ்தானியர்கள் வாகா எல்லையை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றனர். நேற்றைய (ஏப்ரல் 25, 2025) நிலவரப்படி சுமார் 197 பாகிஸ்தனியர்கள் வெளியேறியதாக தகவல் வெளியானது. இந்திய அரசின் கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், விசாக்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தானியர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.