பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்.. மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி
Pakistan Goverment X Account : ஜம்மு காஷ்மீர் பஹல்கான் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கையும் முடக்கியுள்ளது.

பாகிஸ்தான் அரசு எக்ஸ் கணக்கு
டெல்லி, ஏப்ரல் 24: ஜம்மு காஷ்மீர் பஹல்கான் தாக்குதலை (pahalgam terror attack) அடுத்து, பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கை (Pakistan Goverment X Account) மத்திய அரசு முடக்கியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கையும் முடக்கியுள்ளது. அதோடு இல்லாமல், டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்
இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இந்தியா நேரடியாக பாகிஸ்தானை குற்றச்சாட்டி வருகிறது.
பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கலாம் என குற்றச்சாட்டி வருகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 23ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சித்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அட்டாரி வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து எஸ்விஇஎஸ் விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது.
மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி
Pakistan government’s X handle withheld in India following Pahalgam terror attack
Read @ANI Story | https://t.co/IdhMxi014d#India #Pakistan #Pahalgamattack pic.twitter.com/w0MvxDegiN
— ANI Digital (@ani_digital) April 24, 2025
பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2025 மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த சூழலில் தான், பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பை வாபஸ் பெற்று உத்தரவிட்டுள்ளது. இப்படி பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது.
மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாராகி வருகிறது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க பிரதமர் மோடி தலைமையில், 2025 ஏப்ரல் 24ஆம் தேதியான இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.