Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்.. மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி

Pakistan Goverment X Account : ஜம்மு காஷ்மீர் பஹல்கான் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் அரசின்  எக்ஸ் கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.  ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கையும் முடக்கியுள்ளது.

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்.. மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி
பாகிஸ்தான் அரசு எக்ஸ் கணக்குImage Source: PTI/X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Apr 2025 12:29 PM

டெல்லி, ஏப்ரல் 24: ஜம்மு காஷ்மீர் பஹல்கான் தாக்குதலை (pahalgam terror attack) அடுத்து, பாகிஸ்தான் அரசின்  எக்ஸ் கணக்கை (Pakistan Goverment X Account) மத்திய அரசு முடக்கியுள்ளது.  ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கையும் முடக்கியுள்ளது. அதோடு இல்லாமல், டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பை  வாபஸ் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இந்தியா நேரடியாக பாகிஸ்தானை குற்றச்சாட்டி வருகிறது.

பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கலாம் என குற்றச்சாட்டி வருகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 23ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சித்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அட்டாரி வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து எஸ்விஇஎஸ் விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது.

மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2025 மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த சூழலில் தான், பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு மத்திய அரசு முடக்கியுள்ளது.  மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பை வாபஸ் பெற்று உத்தரவிட்டுள்ளது.  இப்படி பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாராகி வருகிறது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க பிரதமர் மோடி தலைமையில், 2025 ஏப்ரல் 24ஆம் தேதியான இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

 

 

டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்!
டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்!...
ஜெயிலர் 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளாரா?
ஜெயிலர் 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளாரா?...
உங்கள் EPFO கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணம் என்ன ?
உங்கள் EPFO கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா? காரணம் என்ன ?...
புற்று மண்ணில் உருவான மாரியம்மன்.. புன்னைநல்லூர் கோயில் ஸ்பெஷல்!
புற்று மண்ணில் உருவான மாரியம்மன்.. புன்னைநல்லூர் கோயில் ஸ்பெஷல்!...
சுந்தர் சி-யின் ‘கேங்கர்ஸ்’ படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா?
சுந்தர் சி-யின் ‘கேங்கர்ஸ்’ படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்குமா?...
அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!...
அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?
அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?...
”பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது" பிரதமர் மோடி!
”பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது
கடவுள் கூட விமர்சனத்திற்கு ஆளாகிறார்... ஏ.ஆர்.ரகுமான் பேச்சு
கடவுள் கூட விமர்சனத்திற்கு ஆளாகிறார்... ஏ.ஆர்.ரகுமான் பேச்சு...
செல்வ வளம் பெருக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
செல்வ வளம் பெருக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!...
பிறந்தநாளில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் டாப் 5 சாதனைகள்..!
பிறந்தநாளில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் டாப் 5 சாதனைகள்..!...