Pahalgam Terrorist Attack: ஜம்மு காஷ்மீரில் போலீஸ் உடை அணிந்து தாக்குதல்! பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காரணமா..? திடுக்கிடும் தகவல்கள்!
Kashmir Tourist Shooting: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் காயமடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், குதிரைகளும் காயமடைந்தன. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பி.ஆர்.எஃப். இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு & காஷ்மீர், ஏப்ரல் 22: இந்தியாவின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் (Jammu Kashmir Terrorist Attack) நடந்துள்ளது. இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். இதில், 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஒருவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் (Tourists) மட்டுமின்றி, குதிரைகளும் காயமடைந்துள்ளன. இதையடுத்து பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதுல். கிடைத்த தகவலின்படி, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 2 முதல் 3 பேர் போலீஸ் மற்றும் ராணுவ உடைகளை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா..?
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ப்டி.ஆர்.எஃப் (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி சூடு நடந்தது எப்படி..?
PTI के हवाले से…
बड़ा आतंकी हमला हुआ है घाटी में।
जिसमें आम नागरिक के हताहत होने की खबर आ रही है।#pahalgamattack#Pahalgam #Jammu pic.twitter.com/DtG3RFvJkA
— Neeraj Kanojia (@NeerajKanojia16) April 22, 2025
முன்னதாக, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பைசரன் புல்வெளியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சுற்றுலா பயணிகள் மற்றும் குதிரைகள் உள்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்ற ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. காயமடைந்தவர்களில் சிலரை உள்ளூர் மக்கள் தங்கள் கழுதைகளின் மீது ஏற்றி கீழே இறக்கினர். காயமடைந்த 12 சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கண்டனம்:
I’m shocked beyond belief. This attack on our visitors is an abomination. The perpetrators of this attack are animals, inhuman & worthy of contempt. No words of condemnation are enough. I send my sympathies to the families of the deceased. I’ve spoken to my colleague @sakinaitoo…
— Omar Abdullah (@OmarAbdullah) April 22, 2025
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இந்த செய்தியை கேட்டு நான் நம்பமுடியாத அளவிற்கு அதிர்ச்சியடைந்தேன். எங்கள் சுற்றுலா பயணிகள் மீதான இந்த தாக்குதல் ஒரு அருவருப்பானது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள் மற்றும் அவமதிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு கண்டன வார்த்தைகள் மட்டும் போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களை தெரிந்து கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.