Pahalgam Terror Attack: இந்திய ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம்.. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!
PM Modi Grants Full Operational Freedom: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவத்திற்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கியுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியுடன் அவசர ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரதமர், ராணுவத்தின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

டெல்லி, ஏப்ரல் 29: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பிறகு இராணுவத்தினரின் பதிலடி, இலக்குகள் மற்றும் நேரத்தை முடிவு செய்ய இந்திய இராணுவத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, இன்று அதாவது 2025 ஏப்ரல் 29ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது பிரதமர் மோடி இந்த சுதந்திரத்தை இராணுவத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பழித்தீர்க்கும் நடவடிக்கைகளில் இந்தியா:
இன்றைய அவசர ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு கடுமையான அடி கொடுப்பது நமது தேசிய உறுதிப்பாடு என்றும், இந்திய இராணுவத்தினர் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்குமா இந்தியா இராணுவம்..?
Pahalgam: PM Modi chairs key meet with Rajnath Singh, NSA Doval, CDS & All Armed Forces #PahalgamTerroristAttack #PMModi #RajnathSingh #TV9News pic.twitter.com/AhCGy2NHiy
— TV9 Tamil (@TV9Tamil) April 29, 2025
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்திய இராணுவம் இந்தியா – பாகிஸ்தான் எல்லையான பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இப்போது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இப்போது இதற்கு பதிலடி கொடுத்த இந்திய இராணுவம் தயாராக உள்ளது.
சுதந்திரம் அளித்த பிரதமர் மோடி:
BIG:🚨 Following the Pahalgam terror attack, PM Modi grants full operational freedom to the armed forces to respond as needed.
Inshort— Jahan, jaise aur jab dil kare Pakistan ko pel do. 🔥🔥 pic.twitter.com/YpZeKjfjXp
— BALA (@erbmjha) April 29, 2025
பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடிகாட்டும் இந்தியா:
- பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 85 சதவீத தண்ணீரை வழங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.
- இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இந்துக்கள் மற்றும் நீண்டகால தங்க அனுமதி பெற்றவர்களை தவிர, பாகிஸ்தான் நாட்டினரை சேர்ந்த விசாக்களை இந்திய அரசாங்கம் ரத்து செய்தது.
- பாகிஸ்தான் நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து அறிவிக்கப்பட்ட விசாக்களும் கடந்த 2025 ஏப்ரல் 27ம் தேதியுடன் முடித்து வைக்க இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது.
- இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் கிட்டத்தட்ட 1,000 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.