Pahalgam Terror Attack: பஹல்காமில் மோசமடையும் நிலைமை.. ஸ்ரீநகர் விரைந்த அமித் ஷா.. 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்!

Tourist massacre Pahalgam: பஹல்காமில், பயங்கரவாதிகள் குழு ஒன்று சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. டி.ஆர்.எஃப் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகருக்கு விரைந்துள்ளார். இந்த தாக்குதல் குஜராத், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை குறிவைத்தது.

Pahalgam Terror Attack: பஹல்காமில் மோசமடையும் நிலைமை.. ஸ்ரீநகர் விரைந்த அமித் ஷா.. 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா

Published: 

22 Apr 2025 20:57 PM

காஷ்மீர், ஏப்ரல் 22: தெற்கு காஷ்மீரில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக பார்க்கப்படும் பஹல்காமில் (Pahalgam) சுற்றுலாப் பயணிகள் குழுவை பயங்கரவாதிகள் குழு இன்று அதாவது 2025 ஏப்ரல் 22ம் தேதி எதிர்பாராதவிதமாக துப்பாக்கிகள் மூலம் தாக்குதலை நடத்தியது. மக்களோடு மக்களாக போலீஸ் சீருடையில் பதுங்கியிருந்த 2 அல்லது 3 பயங்கரவாதிகள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்த 50க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட தொடங்கினர். கிடைத்த தகவலின்படி, இந்த பயங்கரவாத தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.இந்த தாக்குதலுக்கு (Terror Attack) பயங்கரவாத அமைப்பான டி.ஆர்.எஃப் பொறுப்பேற்றுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு:

தெற்கு காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு குழுக்கள் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு முகமை நாளை (23 ஏப்ரல் 2025) பஹல்காம் விரையலாம் என்று கூறப்படுகிறது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நிலவரங்களை கேட்டறிருந்ததாக கூறப்படுகிறது. பிரதமருடன் உரையாரல் நடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்திய பிறகு, அமித் ஷா ஸ்ரீநகருக்கு வந்தடைந்தார். அவரது விமானம் ஸ்ரீநகர் தொழில்நுட்ப விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவருடன் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தற்போது சவுதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா எக்ஸ் தள பதிவு:

பெயர்களை கேட்டு துப்பாக்கிச்சூடு:

கிடைத்த தகவல்களின்படி, இந்த தாக்குதல் குஜராத், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தது தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் சில சுற்றுலாப் பயணிகளின் பெயர்களைக் கேட்டுத் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் நடந்த நேரம் என்ன..?

பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள மலையிலிருந்து இறங்கிய பயங்கரவாதிகள், அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பிற்பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. தாக்குதல் நடந்த இடத்தின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது, அதில் பலர் தரையில் மயங்கி இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், பெண் சுற்றுலாப் பயணிகள் அழுது கதறுவதையும் காணலாம்.

Related Stories
Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதலில் 10 பேர் பலி – தமிழகத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் – வெளியான விவரம்
Viral Video : இருமனம் இணைந்த இரு மாநில திருமணம்… பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வெளியிட்ட வைரல் வீடியோ!
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி – ஸ்ரீநகருக்கு செல்ல உத்தரவு
அண்ணாமலையா? ஸ்மிருதி இரானியா? ஆந்திரா MP ரேஸில் முந்தப்போவது யார்?
Pahalgam Terrorist Attack: ஜம்மு காஷ்மீரில் போலீஸ் உடை அணிந்து தாக்குதல்! பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காரணமா..? திடுக்கிடும் தகவல்கள்!
Tourist attack in Pahalgam: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு.. 5 சுற்றுலா பயணிகள் காயம்!