Pahalgham Attack : பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்ற இந்தியா!
India Withdraws Pakistan Embassy Security | ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியா சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி, ஏப்ரல் 24 : ஜம்மு & காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான (Pakistan Embassy) பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேலும் சில முக்கியமான முடிவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு – 27 பேர் பரிதாப பலி
ஜம்மு & ஜாஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 பேர் உட்பட மொத்தம் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தமர். ஜம்மு & காஷ்மீரில் நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு & காஷ்மீர் தாக்குதல் இந்தியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதலுக்கு மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தடை விதிக்கப்பட்ட லக்ஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதல்லுக்கு பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு உள்ளது தெரியவந்துள்ள நிலையில், இந்திய மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடும் எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி
जम्मू-कश्मीर के पहलगाम में आतंकियों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं कि इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। pic.twitter.com/TMwL58HVTc
— Narendra Modi (@narendramodi) April 24, 2025
பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரசை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்றை இந்த இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக அட்டாரி – வாகா எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.