Pahalgam Terror Attack: தனி ஆளாக பயங்கரவாதிகளுடன் சண்டை! சுற்றுலா பயணிகளை பாதுகாக்க உயிரை விட்ட முஸ்லீம் இளைஞர்!
Syed Adil Hussain Shah: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில், சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்ற உள்ளூர் வழிகாட்டி சையத் அடில் உசேன் ஷா வீரமரணம் அடைந்தார். அடில் ஷா குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்ததால், அவரது மறைவு குடும்பத்திற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த சையத் அடில் உசேன் ஷா
காஷ்மீர், ஏப்ரல் 23: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று அதாவது 2025 ஏப்ரல் 23ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) இந்திய மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளத்தாக்கின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை நடத்திய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். பஹல்காமில் ராணுவ வீரர்களுடன், பாரா கமாண்டோக்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில், உள்ளூர் இளைஞரான சையத் அடில் உசேன் ஷாவும் (Syed Adil Hussain Shah) பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.
யார் இந்த சையத் அடில் உசேன் ஷா..?
அடில் உசேன் சுற்றுலாப் பயணிகளை குதிரையில் அழைத்துச் செல்லும் வேலையை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்றும் அதாவது 2025 ஏப்ரல் 23ம் தேதி சையத் அடில் ஹுசைன் ஷா, சுற்றுலாப் பயணிகளை குதிரையில் ஏற்றி, கார் நிறுத்துமிடத்திலிருந்து பஹல்காமில் உள்ள பைசரன் மைதானத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இந்த மைதானத்திற்கு நடந்தோ அல்லது கால்நடைகளில் சவாதி செய்துதான் போல முடியும். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவர் தன்னுடன் அழைத்துச் சென்ற சுற்றுலாப் பயணியைக் காப்பாற்ற முயன்றார்.
அதாவது, இவர்களை நோக்கி பயங்கரவாதிகள் வந்தபோது, அடில் ஷா தைரியத்தைக் காட்டி ஒரு பயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். அப்போது, பயங்கரவாதிகள் அடில் ஷாவைவும் சுட்டு கொன்றனர்.
ஒரே வருமானத்தை இழந்து தவிக்கும் அடில் ஷா குடும்பம்:
सैयद हुसैन शाह अपने परिवार का इकलौता कमाने वाला था आतंकियों ने धर्म पूछकर मुस्लिम को भी नहीं छोड़ा
अब पर्यटक तो कश्मीर जाएंगे नहीं पर्यटन पर निर्भर कश्मीरी लोगों पर रोजी-रोटी का संकट खड़ा हो गया है
पता नहीं क्यों पुलवामा जैसे षड्यंत्र की बू रही है
सभी मृतकों को विनम्र श्रद्धांजलि pic.twitter.com/AKMPDSswGu— अनामिका यादव (@AAnamika_) April 23, 2025
வயதான பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய அவரது குடும்பத்தினருக்கு ஒரே வருமானம் என்றால், அது அடில் ஹுசைன் ஷாவின் வருமானம் மட்டுமே. இதுகுறித்து அடில் ஹுசைன் ஷாவின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், “ 3 மணிக்கு அங்கு ஏதோ தாக்குதல் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் பிறகு, நாங்கள் அடில் ஹுசைன் ஷாவிற்கு போன் செய்தோம். ஆனால், போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. சிறிதுநேரம் கழித்து போன் ஆன் செய்யப்பட்டது. அப்போது, நாங்கள் பலமுறை அவருக்கு போன் செய்தோம். ஆனால், யாரும் போனை எடுக்கவில்லை. பின்னர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். நாங்கள் திரும்பி வந்தபோது, அவர் மருத்துவமனையில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நான் அங்கு அங்கு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து அடிலின் அப்பா தெரிவிக்கையில், “ எனது மகன் நிரபராதி, இதை செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.