Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதலில் 10 பேர் பலி – தமிழகத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் – வெளியான விவரம்

Pahalgam Terror Attack: ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் கடுமையாக காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

Pahalgam Terror Attack:  பஹல்காம் தாக்குதலில் 10 பேர் பலி - தமிழகத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் - வெளியான விவரம்

பஹல்காம் தாக்குதலில் 10 பேர் பலி

Updated On: 

22 Apr 2025 23:38 PM

ஜம்மு காஷ்மீரின் (Jammu Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 16 பேர் பலியானதாகவும், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் யார் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற அனைத்து விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இடம் பெற்றுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் விவரங்கள்

இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 30 பேர் இறந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் தற்போது 16 இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறந்ததாக கூறப்பட்ட 10 பேரில் கர்நாடகாவை சேர்ந்த ஷிவம் மோகா, மஞ்சுநாத் என்ற இருவர், மகாராஷ்டிராவை சேர்ந்த திலிப் ஜெயராம் மற்றும் அதுல் ஸ்ரீகாந்த் என்ற இருவர், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வினய் நர்வால் என்பவர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுபம் திவிவேதி என்பவர் நேபாலை சேர்ந்த சந்திப் நெவ்பனே, குஜராத்தை சேர்ந்த ஹிமத் பாய் என்பவர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த உத்வானி பிரதீப் குமார் ஆகியோரும் இந்த தாக்குதலில் மரணமடைந்துள்ளனர். மேலும் மரணமடைந்த 5 பேர் குறித்த விவரங்கள் இல்லை.

தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் படுகாயம்

 

அதே போல தமிழ்நாட்டை சேர்ந்த 57 வயதான பாலசந்திரா, டாக்டர் பரமேஸ்வரம், 83 வயதான சந்துரு என்பவரும் இந்த தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பெயரைக் கேட்டு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜம்மு  காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த  பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மக்களோடு மக்களாக போலீஸ் சீருடையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்த 50க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுடத் தொடங்கினர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உடனடியாக தகவல் வழங்கியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவசரமான ஆலோசனையும் நடத்தியுள்ளார். தற்போதைய நிலைமை குறித்து விரைவில் ஸ்ரீநகருக்கு புறப்பட்டு, அங்குள்ள அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுடன் மீளாய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories
காஷ்மீர் தாக்குதல்.. அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர்.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
Viral Video : இருமனம் இணைந்த இரு மாநில திருமணம்… பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வெளியிட்ட வைரல் வீடியோ!
Pahalgam Terror Attack: பஹல்காமில் மோசமடையும் நிலைமை.. ஸ்ரீநகர் விரைந்த அமித் ஷா.. 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்!
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி – ஸ்ரீநகருக்கு செல்ல உத்தரவு
அண்ணாமலையா? ஸ்மிருதி இரானியா? ஆந்திரா MP ரேஸில் முந்தப்போவது யார்?
Pahalgam Terrorist Attack: ஜம்மு காஷ்மீரில் போலீஸ் உடை அணிந்து தாக்குதல்! பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காரணமா..? திடுக்கிடும் தகவல்கள்!