அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே.. முழு ஒத்துழைப்பை தருவதாக உறுதி!

Rahul Gandhi Pledges Full Cooperation to Govt | இன்று (ஏப்ரல் 24, 2025) உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று கூறியுள்ளார். 

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே.. முழு ஒத்துழைப்பை தருவதாக உறுதி!

ராகுல் காந்தி

Updated On: 

25 Apr 2025 00:20 AM

டெல்லி, ஏப்ரல் 24 : பஹல்காம் (Pahalgam) பயங்கரவாத தாக்குதல் (Terrorist Attack) தொடர்பாக டெல்லியில் இன்று (ஏப்ரல் 24, 2025) நடைபெற்ற கூட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கலந்துக்கொண்ட நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 சுற்றுலா பயணிகள்

ஜம்மு & காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 24, 2025 அன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இந்த கொடூர தாக்குதல் நாட்டையே நிலைகுலைய செய்த நிலையில், இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளது. இதன் காரணமாக, இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக பிரதம் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் அட்டாரி – வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகளை எடுத்தது. அதனை தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 24, 2025) உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. கூட்டம் தொடங்கியதும் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடைபெற்றது.

அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு – கிரண் ரிஜிஜூ

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அனைத்துக் கட்சி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்றினைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

கிரண் ரிஜிஜூ செய்தியாளர் சந்திப்பு

அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று கூறியுள்ளார்.