சுற்றுலா பயணிகளுக்கு முதலில் உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் – மெஹபூபா முஃப்தி!
Mehbooba Mufti Spoke About Pahalgam Attack | பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட போது அவர்கள் இஸ்லாமியர்களா இல்லையா என கேட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் எழுந்த நிலையில், மெஹபூபா முஃப்தி அது குறித்து பேசியுள்ளார்.

ஜம்மு & காஷ்மீர், ஏப்ரல் 25 : பகல்ஹாம் தாக்குதலின் (Pahalgam Attack) போது சுற்றுலா பயணிகளுக்கு முதலில் உதவியவர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்கள் தான் என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி (Mehabooba Mufti) தெரிவித்துள்ளார். பஹல்காம் விவகாரம் குறித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் எழுந்த வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு உதவிய உள்ளூர் முஸ்லிம்கள் குறித்து எந்த ஊடகமும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பெஹல்காம் தாக்குதல் தொடர்பாக அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலில் பலியான 26 சுற்றுலா பயணிகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கட்டணங்களை தெரிவித்து வந்த நிலையில், மெஹபூபா முஃப்தி மாபெரும் ஆர்பாட்டத்தை மேற்கொண்டார். சுற்றுலா பயணிகளை கொலை செய்ய வந்த பயங்கரவாதிகள், அவர்களை இஸ்லாமியர்களா இல்லையா என கேட்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக, இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரங்கள் எழ தொடங்கியது. இந்த நிலையில், அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி விளக்கமளித்துள்ளார்.
மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மெஹபூபா முஃப்தி
Former Chief Minister Mehbooba Mufti joins a protest against a terror attack on civilians calling the victims martyrs and saying Kashmir stands with the country in this moment of pain. pic.twitter.com/M9b02h3mmj
— Mohit Bhan موہت بھان (@buttkout) April 23, 2025
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் – மெஹபூபா முஃப்தி
இது குறித்து கூறியுள்ள மெஹபூபா முஃப்தி, பஹல்காமில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை முதலில் காப்பாற்றியவர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்கள் தான். அதற்கு பிறகு தான் ராணுவமும், அரசும் உதவிக்கு வந்தது. சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் தான் உதவி செய்தனர். அவர்கள் தங்களது ரத்தத்தை கொடுத்து அவர்களை காப்பாற்றினர் என்று கூறியுள்ளார். மேலும், நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல, பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கொடூரமாக தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கும் நிலையில், ஒவ்வொரு இந்துவும் தாக்குதல் நடத்துவதாக சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.