பஹல்காம் தாக்குதல்… காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி!

Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதலை அடுத்து, காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்களை மாநில அரசு மூடியுள்ளது. மீண்டும் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, காஷ்மீர் அரசு 48 சுற்றுலா தலங்களை மூடியுள்ளது. மற்ற சுற்றுலா தலங்களை பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதல்... காஷ்மீரில் 48 சுற்றுலா  தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி!

காஷ்மீர்

Updated On: 

29 Apr 2025 12:34 PM

காஷ்மீர், ஏப்ரல் 29:  பஹல்காம் தாக்குதலை (Pahalgam Terror Attack) அடுத்து, காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் அரசு காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தளங்களில் 48 இடங்களை மூடியுள்ளது. யூஸ்மார்க், டூசிமைதான், தூத்பத்ரி, அஹர்பால், கவுசர்நாக், பாங்கஸ், கரிவான் டைவர் சண்டிகம், பாங்கஸ் பள்ளத்தாக்கு, வாட்லாப், ராம்போரா, ராஜ்போரா, சியர்ஹார் உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன.

காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்

திறந்து வைக்கப்பட்டிருக்கும் சுற்றுலா தளங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் காண்டர்பால் மாவட்டங்களில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளத்தாக்கில் தீவிரவாதக் குழுக்களின் வீடுகள் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காஷ்மீர் முழுவதும் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  சுற்றலா பயணிகள் மீது பயணிகள் தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில்   26 பேர் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.  மேலும், பலர் காயம் அடைந்தனர்.

இந்த  தாக்குதலில் 26 பேர் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டது நாட்டையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ரெசிஸ்டன்ஸ்  பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  இருப்பினும், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் பங்கு இருப்பதாக  இந்தியா குற்றச்சாட்டி வருகிறது.

மத்திய அரசு அதிரடி

ஆனால், இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் விசா ரத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றறும், வாகா எல்லை மூடல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

இதனால், இருநாட்டு எல்லையிலும் பதற்றம் நிலவி வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளி வீடுகள் தகர்க்கப்பட்டன. அதோடு, அவர்கள் தேடும் பணிகள் நடந்து வருகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கை என்ஐஏ எடுத்துள்ளது. என்ஐஏ அதிகாரிகள் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தற்போது தான் ஜம்மு காஷ்மீல் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதே நேரத்தில்,  பஹசுற்றுலா பயணிகளும் வருகையும் குறைந்துள்ளதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Cabinet Committee Meetings: பிரதமர் மோடி தலைமையில் 3 முக்கிய கூட்டங்கள்.. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு கூடுகிறது அமைச்சரவை..!
Pahalgam Terror Attack: இந்திய ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம்.. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!
Pahalgam Terror Attack: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தீவிர ஆலோசனை!
பன்னீர் தர மாட்டீங்களா? களேபரமான திருமண மண்டபம்.. இளைஞர் செய்த அட்ராசிட்டி!
ஏப்ரல் 29-க்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு என்ன நடக்கும்?
டென்ஷனான முதல்வர்.. மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா.. வெளியான வீடியோ!