பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. களமிறங்கிய என்ஐஏ… தீவிர விசாரணை!
Pahalgam Terror Attack Case : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. எனவே, வழக்கை தேசிய புலனாய்வு முகமை தனது விசாரணை தீவிரப்படுத்தியுள்ளது. முதலில், பயங்கரவாத தாக்குதரில் நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 27 : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) வழக்கை ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடமிருந்து தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) எடுத்துள்ளது. இதனை அடுத்து, என்ஐஏ பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது. பஹல்காம் வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய அரசு ஒப்படைத்ததை அடுத்து, என்ஐ விசாரணை நடத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதல் வழக்கை ஜம்மு காஷ்மீர் காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குல்
இதனை அடுத்து, என்ஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இதுகுறித்த என்ஐஏ வெளியிட்ட அறிக்கைல், “பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் ஒரு ஐஜி, ஒரு டிஐஜி மற்றும் ஒரு எஸ்பி ஆகியோரின் மேற்பார்வையில் பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த கொடூரமான தாக்குதலை நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை நடத்துகிறோம். காஷ்மீரில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மிக நுணுக்கமாக விசாரிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளின் செயல்பாட்டு முறை குறித்து என்ஐஏ அதிகாரிகள் உன்னிப்பாக விசாரித்து வருகின்றனர்.
பயங்கரவாதிகள் பஹல்காமில் எப்படி நுழைந்தார்கள்.. வெளியேறியது குறித்து விசாரிக்கிறோம். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொடூரமான தாக்குதலுக்கு வழிவகுத்த பயங்கரவாத சதியை அம்பலப்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் குழுக்கள் முழு சோதனையை நடத்தி வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
விசாரணையை தொடங்கிய என்ஐஏ
NIA Takes Over Pahalgam Terror Attack Case on MHA’s Orders pic.twitter.com/w5oUOrECa1
— NIA India (@NIA_India) April 27, 2025
பஹம்காம் தாக்குதல் நடந்து 5 நாட்களுக்கு பிறகும் அந்த அதிர்வலைகள் இருந்து வருகிறது. இருப்பினும், ஜம்மு காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பொதுமக்கள் தங்களது அன்றாடை வாழ்க்கை தொடங்கியுள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நான்கு பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது அவரை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
எல்லையில் பயங்கரவாதிகளை குறிவைத்து, பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.