முதுநிலை நீட் தேர்வு.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
NEET PG Exam 2025 : நீட் முதுநிலை தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று தொடங்குறது. இன்று முதல் 2025 மே 7ஆம் தேதி இரவு 11.55 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. நீட் முதுநிலை தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

நீட் முதுநிலை தேர்வு
டெல்லி, ஏப்ரல் 17: 2025 நீட் முதுநிலை நீட் (NEET PG Exam 2025)தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று தொடங்க உள்ளது. தேர்வர்கள் தேவையான ஆவணங்களை உள்ளீட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். தேர்வர்கள் 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று முதல் 2025 மே 7ஆம் தேதி விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. நீட் இளநிலை தேர்வு, முதுநிலை தேர்வு என நடத்தப்பட்டு வருகிறது.
முதுநிலை நீட் தேர்வு
இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் நீட் தேர்வுகளை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். எம்பிபிஎஸ், பிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு இளநிலை நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்களுககு முதுநிலை படிக்க தகுதியானவர்கள். எனவே, அரசு, தனியார், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் எம்டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு முதுநிலை நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வையும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 52,000 முதுகலை மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு நீட் முதுநிலை தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் https://natboard.edu.in/ என்ற இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுநிலை தேர்வு 2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளில் நடைபெற உள்ளது.
முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று முதல் நீட் முதுநிலை தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. எனவே, தேர்வர்கள் மே 7ஆம் தேதி இரவு 11.55 மணி வரை விண்ணப்பித்து கொள்ளலாம். எனவே, தற்போது எப்படி விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தை பார்ப்போம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வுகள் நீட் முதுநிலை தேர்வர்கள் https://natboard.edu.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- இதனை அடுத்து, முகப்புப் பக்கத்தில், NEET PG 2025க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- இதன்பிறகு, உங்களுக்கான விண்ணப்ப படிவம் தோன்றும். அதில், தேவையான விவரங்களை உள்ளீட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பி, கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.