நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு : ராகுல்காந்தி – சோனியாகாந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

National Herald Money Laundering Case : நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் வெளிநாட்டுத் தலைவர் சாம் பிட்ரோடா, சுமன் துபே மற்றும் பலரின் பெயர்களையும் அமலாக்கத் துறை சேர்த்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு : ராகுல்காந்தி - சோனியாகாந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ராகுல்காந்தி - சோனியாகாந்தி

Updated On: 

15 Apr 2025 20:54 PM

நேஷனல் ஹெரால்டு வழக்கு வழக்கு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) மற்றும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் தொடர்பானது, இதில் அடுத்த விசாரணை 2025, ஏப்ரல் 25 அன்று நடைபெறும். இந்த குற்றப்பத்திரிகை ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது அப்போது தான் தெரியவரும். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தற்போது சட்ட ஆலோசனை பெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி, லக்னோ மற்றும் மும்பையில் உள்ள நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரூ. 700 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை மற்றும் லக்னோவில் PMLA இன் கீழ் ED இந்த பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ED வட்டாரங்களின்படி, ரூ.661.69 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் AJL உடன் இணைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சுமார் ரூ.90.21 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யங் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

விசாரணை நிறுவனமான அமலாக்க இயக்குநரகத்தின் (ED) இந்த நடவடிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சுப்பிரமணியன் சுவாமியின் புகாரின் அடிப்படையில், நேஷனல் ஹெரால்டு தொடர்பான பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி பதிவு

 

 

முன்னதாக, காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் மற்றும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ரூ.661 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால்
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இது குறித்து காங்கிரஸ் கட்சியோ அல்லது ராகுல்காந்தி தரப்போ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

 2021 முதல்

நேஷனல் ஹெரால்டு வழக்கை அமலாக்கத்துறை 2021 முதல் விசாரித்து வருகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுமன் துபே மற்றும் ஷியாம் பிட்ரோடா ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. சோனியா மற்றும் ராகுல் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் ரூ.2,000 மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க யங் இந்தியா நிறுவனத்துடன் சதி நடந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.