நேஷனல் ஹெரால்டு வழக்கு.. ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க மறுப்பு.. டெல்லி கோர்ட் உத்தரவு!
National Herald Case : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்து, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, ஏப்ரல் 26: நேஷனல் ஹெரால்டு (national herald case) பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு (Sonia Rahul Gandhi) நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. அமலாக்கத்துறையிடன் போதுமான ஆவணங்களை இல்லாததால், அவர்களுக் நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2014ஆம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க மறுப்பு
இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே, ராகுல் காந்தி, சோனியா காந்தி நேரில் விசாரணைக்கு ஆஜராகினர். அண்டையில், கூட டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெயர் இடம்பெற்று அவர்கள் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவர்களை தவிற காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர் சாம் பிட்ரோடாவின் பெயரும், சுமன் துபே உள்ளிட்ட பலரது காங்கிரஸ் பிரநிதிகள் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
மேலும், நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் தாய் நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாகவும், அவர்கள் 99 சதவீத பங்குகளை ரூ..50 லட்சத்தை தங்கள் தனியார் நிறுவனமான யங் இந்தியனுக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி மாற்றியதாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்தது.
டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு
இதன் மூலம் ரூ.988 கோடி வருமானத்தை அவர்கள் ஈட்டியதாக கூறுகிறது. இதில், ரூ.755 கோடி மதிப்புள்ள ரியல் எஸ்டேட் மற்றும் பிற சொத்துகளில் முதலீடு செய்துள்ளது. 2010-11 நிதியாண்டில் யங்க் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, டெல்லி, மும்பை, இந்தூர், பஞ்ச்குலா, லக்னோ மற்றும் பாட்னா போன்ற நகரங்களில் உள்ள அதன் சொத்துக்களிலிருந்து அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் வாடகை பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு 2025 ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடக் கோரி அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால், இதற்கு போதிய ஆவணங்கள் இல்லாததால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மறுத்துவிட்டது.
இதுகுறித்து டெல்லி நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே கூறுகையில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சில ஆவணங்கள் இல்லை. அந்த ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அதன் பிறகு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்றார்.
அப்போது, இது மிகவும் வெளிப்படையானது என்றும் நாங்கள் எதுவும் மறைக்கவில்லை என்று அமலாக்கத்துறை வாதிட்டது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து முடிவு செய்வதற்கு முன்பு, குற்றப்பத்திரிகையில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்து, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் கூறி வழக்கை 2025 மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.