பிரதமருக்காக சபதம்.. 14 ஆண்டுகளுக்கு பிறகு காலணி அணிந்த நபர்… ஏன் தெரியுமா?

PM Modi Rampal Kashyap: நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்றும், தன்னை நேரில் சந்திக்கும் வரை காலணி அணிய மாட்டேன் என்றும் ஹரியானாவைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் சபதம் எடுத்த நிலையில், அதனை பிரதமர் மோட முடித்து வைத்தார். பிரதமர் மோடி ராம்பால் காஷ்யப்பை சந்தித்து, காலணி அணியச் செய்தார். இதன் மூலம், அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு காலணி அணிந்துள்ளார்.

பிரதமருக்காக சபதம்.. 14 ஆண்டுகளுக்கு பிறகு காலணி அணிந்த நபர்... ஏன் தெரியுமா?

பிரதமர் மோடி

Updated On: 

15 Apr 2025 08:50 AM

டெல்லி, ஏப்ரல் 15: கடந்த 14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்த ஹரியானவைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப்பை பிரதமர் மோடி சந்தித்து, புதிய காலணி வாங்கிக் கொடுத்து அணியச் செய்து வாழ்த்தினார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நரேந்திர மோடி பிரதமாராகும் வரை காலணி அணிய மாட்டேன் என ராம்பால் காஷ்யப் சபதம் எடுத்திருந்தார். 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பிரதமர் ஆன பின்னரும் தொடர்ந்து அவர் காலணி அணியாமல் இருந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவரை அழைத்து காலணி வாங்கிக் கொடுத்து அணியச் செய்தார்.

மோடிக்காக காலணி அணியாத நபர்

2025 ஏப்ரல் 14ஆம் தேதி பிரதமர் மோடி ஹரியானாவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். இதன்பின், தனக்காக 14 ஆண்டு வருடங்கள் காலணி அணியாமல் இருந்த ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் மோடி சந்தித்து காலணி அணியச் செய்தார்.

இவர் ஹரியானாவின் கைத்தலைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்று தெரிந்தது. இவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர். இவர் மோடி பிரதமராகும் வரையும், அவரை தான் சந்திக்கும் வரையும் காலணி அணியமாட்டேன் என ராம்பால் காஷ்யம் சபதம் எடுத்தார்.

அதன்படியே, கடந்த 14 ஆண்டுகளாக ராம்பால் காஷ்யப் காலணி அணியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். மோடி 2014ல் பிரதமர் ஆன பிறகும், அவர் காலணி அணியாமல் இருந்தார். பிரதமர் மோடி சந்திக்கும் வரை காலணி அணியமாட்டேன் என ராம்பால் காஷ்யப் சபதம் எடுத்து, அதன்படியே காலணி அணியாமல் இருந்தார்.

14 வருட சபதத்தை முடித்து வைத்த பிரதமர்


இந்த நிலையில், ராம்பால் காஷ்யப்பின் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது. அதோடு, அவரும் 14 ஆண்டுகளுக்கு பிறகு காலணி அணிந்தார். அதாவது, 2025 ஏப்ரல் 14ஆம் தேதி ஹரியானா மாநிலம் யமுனா நகரில் பிரதமர் மோடி, ராம்பால் காஷ்யப்பை சந்தித்து பேசினார்.

அப்போது, ராம்பால் காஷ்யப்பின் செயலுக்கு நன்றி கூறிய மோடி, மீண்டும் இதுபோன்ற சபதம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், ராம்பால் காஷ்யப்புக்கு புதிய காலணி வாங்கிக் கொண்டு, அவருக்கு அணியச் செய்தார் பிரதமர் மோடி.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “யமுனாநகரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கைத்தலைச் சேர்ந்த ஸ்ரீ ராம்பால் காஷ்யப் ஜியைச் சந்தித்தேன். நான் பிரதமரான பிறகுதான் காலணிகளை அணிவேன் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சபதம் எடுத்திருந்தார். ராம்பால் போன்றவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் அத்தகைய சபதங்களை எடுக்கும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பை நான் மதிக்கிறேன்… தயவுசெய்து சமூகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.