Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மும்பை தாக்குதல்… இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் முக்கிய தீவிரவாதி.. சிறையில் குவியும் அதிகாரிகள்!

Tahawwur Rana: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து 2025 ஏப்ரல் 10ஆம் தேதி காலை டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து, டெல்லி சிறையில் அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும்.

மும்பை தாக்குதல்… இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் முக்கிய தீவிரவாதி..  சிறையில் குவியும் அதிகாரிகள்!
தஹாவூர் ராணாImage Source: TV9
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Apr 2025 13:59 PM

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் (Mumbai terror attacks) குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா (Tahawwur Rana) இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். இன்று இரவு அல்லது 2025 ஏப்ரல் 10ஆம் தேதி காலை இந்தியாவுக்கு வருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தஹாவூர் ராணாவை நாடு கடத்துவதை தடுத்து நிறுத்தக் கோரிய மனுவை நிராகரித்ததை அடுத்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். இவர் ஏப்ரல் 10ஆம் தேதி காலை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய தீவிரவாதி இந்தியாவுக்கு நாடு கடத்தல்

அமெரிக்க நீதிமன்றத்தின் பரிந்துரைகளின்படி, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இரண்டு சிறைகளில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர். ராணா வந்தவுடன், டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் காவலில் வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் 6 அமெரிக்கர்களும் உயிரிழந்தனர். பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தஹாவூர் ராணா.

சிறையில் ஏற்பாடுகள் தீவிரம்

தொழிலதிபர் தஹாவூர் ராணா கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர். மும்பை தாக்குதலின்போது அவர் தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்தார். தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரித்த தஹாவூர் ராணாவை நாடு கடத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில், தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர். தஹாவூர் ராணா ஏப்ரல் 10ஆம் தேதி காலை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வர உள்ளார். இதனால், டெல்லி மற்றும் மும்பை சிறைகளில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வெளியான தகவலின்படி, தஹாவூர் ராணாவை முதலில் டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு சிறையில் காவலில் வைக்கலாம்.

அவர் அங்கு விசாரணை எதிர்கொள்வார். தஹாவூர் ராணாவை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுளளது. இந்த குழு மும்பை தாக்குதல் தொடர்பான கேள்விகளை ராணாவிடம் கேட்கும். இதற்கு பிறகு, அவரை மும்பைக்கு அழைத்து செல்லலாம். அங்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

முன்னதாக, தன்னை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி தஹாவூர் ராணா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அமெரிக்கா உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து, தஹாவூர் ராணா 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...