Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மும்பை தாக்குதல்.. டெல்லியில் இறங்கிய தஹாவூர் ராணா.. சுற்றி வளைத்த போலீஸ்!

Tahawwur rana : மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக குற்றச்சாட்டப்படும் தஹாவூர் ராணா டெல்லிக்கு வந்தடைந்தார். டெல்லி வந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம் மும்பை தாக்குதல் குறித்து கேள்வி கேட்கப்படலாம். சம்பவ நடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு கைதான தஹாவூர் ராணா இந்தியா வந்தடைந்துள்ளார்.

மும்பை தாக்குதல்.. டெல்லியில் இறங்கிய தஹாவூர் ராணா.. சுற்றி வளைத்த போலீஸ்!
தஹாவூர் ராணா
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Apr 2025 15:28 PM

டெல்லி, ஏப்ரல் 10: 2008 மும்பை பயங்கரவாத (Mumbai Terror Attack)  தாக்குதலுக்கு மூளையாக  செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா (Tahawwur rana), அமெரிக்காவிலிருந்து 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று டெல்லி வந்தடைந்தார். இந்திய உளவுத்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் கூட்டுக் குழுவுடன் ஒரு சிறப்பு விமானத்தில் தஹாவூர் ராணா அழைத்து வரப்பட்டார். தேசிய தலைநகரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய தஹாவூர் ராணாவை தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர்.

டெல்லியில் இறங்கிய தஹாவூர் ராணா

அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த 2008ஆம் அண்டு மும்பையில் யாரும் மறக்க முடியாத அளவுக்கு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் தூக்கிலடப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் தஹாவூர் ராணா. இந்த தாக்குதல் நடந்த அன்று மும்பை தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்தார்.

இவர் போட்ட பிளானில் தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவரை கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் மற்றொரு வழக்கில் கைதானார். 2013ஆம் ஆண்டு அமெரிக்கா நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சுற்றி வளைத்த போலீஸ்

மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு அழைத்து வர அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டது. இதற்கு அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது. ஆனால், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் ராணா அமெரிக்கா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனை அடுத்து, தஹாவூர் ராணா இந்தியாவுக்கு அழைத்து அதிகாரிகள் தயாராகினர். அதன்படி அடிப்படையில, தஹாவூர் ராணா சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு 2025 ஏப்ர்ல் 10ஆம் தேதி 2.30 மணியளவில் வந்தடைந்தார்.

உடனே தேசிய புலனாய் அதிகாரிகள் உடனே அவரை கைது செய்தனர் . டெல்லியில் என்ஐஏ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளனர். அதன்பிறகு, அவர் மும்பைக்கு அழைத்து செல்லப்படுவார்.

நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ராணா சித்திரவதை செய்யப்படமாட்டார் என்றும், சிறையில் போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அவர் நாடு கடத்தப்பட்ட குற்றங்களுக்காக மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் இந்தியா அமெரிக்காவிற்கு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பை தாக்குதல் நடந்து 16 வருடங்களுக்கு பிறகு,  முக்கிய தீவிரமாக தஹாவூர் ராணவிடம் விசாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!...
தமிழகத்தில் மாறி மாறி பொழியும் மழையும் வெயிலும்....
தமிழகத்தில் மாறி மாறி பொழியும் மழையும் வெயிலும்.......
ககெய்போ என்ற ஜப்பானிய சேமிப்பு முறை பற்றி தெரியுமா?
ககெய்போ என்ற ஜப்பானிய சேமிப்பு முறை பற்றி தெரியுமா?...
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...