மும்பை தாக்குதல்… தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் என்ஐஏ காவல்.. தீவிர விசாரணை!

Tahawwur Rana NIA Custody: 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கராத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவுக்கு 18 நாட்கள் என்ஐஏ காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அவரிடம் 30க்கும் கேள்விகள் கேட்கப்படும் என கூறப்படுகிறது.

மும்பை தாக்குதல்... தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் என்ஐஏ காவல்.. தீவிர விசாரணை!

தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் என்ஐஏ காவல்

Published: 

11 Apr 2025 06:59 AM

டெல்லி, ஏப்ரல் 11: பல வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட (Mumbai Terror Attack) தஹாவூர் ராணா (Tahawwur Rana), சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் 14 நாட்கள் என்ஐஏ காவலில் வைக்கப்பட்டு, விசாரணை எதிர்கொள்வார். தஹாவூர் ராணாவை தேசிய புலனாய்வு அமைப்பு 18 நாள் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து, அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் காவல்

அமெரிக்க கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550 விமானம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி தஹாவூர் ராணாவை ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்த சிறப்பு விமானம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி மாலை 6.22 மணிக்கு டெல்லியின் பாலம் தொழில்நுட்ப விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, 6.30 மணிக்கு அவர் விமானத்திலிருந்து வெளியேறினார்.  இதனை அடுத்து, 6.40 மணிக்கு உபா சட்டத்தின் கீழ் அவர் கைதானார். அவருக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அங்கு நீதிபதி சந்திர ஜீத் சிங் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 120B, 121, 121A, 302, 468 மற்றும் 471 மற்றும் UAPA பிரிவுகள் 16,18 மற்றும் 20 ஆகியவற்றின் கீழ் தஹாவூர் கைது செய்யப்பட்டார்.

என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை


அவருக்கு 18 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். என்ஐஏ தலைமையகத்தில் அவர் விசாரணையை எதிர்கொள்வார். அவர் தொடர்ந்து 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் இருப்பார். குறைந்தது அவரிடம் 30 கேள்விகள் கேட்கப்படும் என கூறப்படுகிறது.

மும்பையில் 2008ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தஹாவூர் ராணா. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

நாட்டு மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் 66 வயதான தஹாவூர் ராணாண பாகிஸ்தான் பயங்வாத லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர். இவர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி இந் தாக்குதலை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இவர் 2010ஆம் ஆண்டு அமெரிக்காவில் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மும்பை தாக்குதல் தொடர்பாக தஹாவூர் ராணாவிடம் விசாரித்த மத்திய அரசு அமெரிக்காவிடம் முறையிட்டதை அடுத்து, அவர் நாடு கடத்தப்பட்டார்.