Sikkim Landslide : சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்!

1000 Tourists Stranded in Sikkim Landslide | வடக்கு சிக்கிமில் உள்ள மிகெப்பெரிய மலைப்பகுதிகளான லாச்சென் மற்றும் லாச்சுங்கில் நிலச்சரிவு காரணமாக சுமார் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அங்கு சாலைகள் நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளை மீட்பதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது.

Sikkim Landslide : சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்!

சிக்கிம் நிலநடுக்கம்

Published: 

25 Apr 2025 22:40 PM

காங்டாக், ஏப்ரல் 25 : சிக்கிமின் (Sikkim) லாக்சென் (Loksan) மற்றும் லாச்சுங் (Lachung) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் (Land Slide) சுமார் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அங்கு சிக்கியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மிகவும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சிக்கிம் நிலச்சரிவு பாதிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலச்சரிவில் சிக்கி தவித்து வரும் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்

இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக சிக்கிம் உள்ளது. இதன் காரணமாக அங்கு ஏராளமான மக்கள் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், வடக்கு சிக்கிமில் உள்ள மிகெப்பெரிய மலைப்பகுதிகளான லாச்சென் மற்றும் லாச்சுங்கில் நிலச்சரிவு காரணமாக சுமார் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு

சிக்கிமின் சாலை பகுதிகளில் சிக்கியிருந்த சுமார் 1,500 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று (ஏப்ரல் 24, 2025) இரவு அருகில் உள்ள கிராமங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், அங்கு மேலும் 1,000-க்கும் மெற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிமில் நேற்று இரவு முதல் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவி ஏற்பட்ட நிலையில் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவால் சரிந்து விழும் மலை

சிக்கிம் நிலச்சரிவில் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களும் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.