அதிர்ந்த பெங்களூரு.. நடுரோட்டில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்.. என்ன நடந்தது?
Bengaluru Crime News : பெங்களூரு தெருவிலே மனைவியை கணவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மீது சந்தேகம் அடைந்த நபர், அவரை நடுரோட்டிலேயே வெட்டிக் கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த கிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்
பெங்களூரு, ஏப்ரல் 06: பெங்களூருவில் (Bengaluru Women Murder) பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு தெருவிலே மனைவியை கணவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (43). இவர் தினக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாரதா. இவர்கள் இரண்டு பேருக்கு அடிக்கடி சண்டை ஏற்படுவதாக தெரிகிறது.
நடுரோட்டில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
மனைவி ம சாரதா சந்தேகம் அடைந்து அடிக்கடி கிருஷ்ணப்பா சண்டை போட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 7.45 மணிக்கு சாரதா வேலையை முடித்துவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தனக்கு துரோகம் செய்ததாக கூறி, மனைவி சராதாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
சாராதாவை கழுத்து அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சாராதாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணப்பாவை கைது செய்து இரண்டு கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.
என்ன நடந்தது?
அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பிரிவு 103 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக கிருஷ்ணப்பாவிடம் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணப்பாவுக்கும், சாராதாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சாரதா பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களின் 16 வயது மகன் கிருஷ்ணப்பாவுடன் இருந்தார். அவர்களின் 12 வயது மகள் சாராதாவுடன் இருந்தார். பிரிந்து வாழ்ந்த போதிலும், சாராதாவை கிருஷ்ணப்பா அடிக்கடி சந்தித்து உடல் ரீதியாக தாக்கியதாக தெரிகிறது.
வேறொருவருடன் உறவில் இருப்பதாக சந்தேகித்து, அவரை அடிக்கடி சந்தித்து சண்டை போட்டு வந்திருக்கிறார். அப்படி தான், சம்பவத்தன்று பெங்களூருவுக்கு வந்த கிருஷ்ணப்பா சாராவை வெட்டிக் கொன்றார். அப்போது, கிருஷ்ணப்பா மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
நடுரோட்டில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்கள் கொலை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. எனவே, கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.