மனைவி மீது சந்தேகம்.. சுத்தியலால் அடித்தே கொன்ற கணவன்.. ஷாக் சம்பவம்!

Uttar Pradesh Crime News : உத்தர பிரதேசத்தில் மனைவியை சுத்தியலால் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவர், அவரை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவி மீது சந்தேகம்.. சுத்தியலால் அடித்தே கொன்ற கணவன்..  ஷாக் சம்பவம்!

மனைவியை கொன்ற கணவர்

Published: 

05 Apr 2025 13:15 PM

உத்தர பிரதேசம், ஏப்ரல் 05: உத்தர பிரதேசத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மனைவி மீது சந்தேகம் அடைந்த அவர், சுத்தியலால் அவரது தலையில் அடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 15 பகுதியில் வசிப்பர் ஹைதர் (50). இவரது மனைவி மில்லியா இஸ்லாமியா (42). இருவரும் பொறியியல் பட்டாரி ஆவார். ஹைதர் பீகாரைச் சேர்ந்தவர்.

மனைவி மீது சந்தேகம்

இவர் தற்போது வேலைக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். பெண் மில்லியா இஸ்லாமியா ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியருக்கு 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவர்களின் மகன் பொறியியல் படித்து வருகிறார். மகள் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மனைவி திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக ஹைதர் சந்தேகப்பட்டு, அவரிடன் சண்டை போட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று, மனைவி மீது சந்தேகம் அடைந்த ஹைதர், அவரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் மனைவியை அருகில் கிடந்த சுத்தியலால் தலையில் தாக்கி கொலை செய்திருக்கிறார். வீட்டிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுத்தியலால் அடித்தே கொன்ற கணவன்

தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அவரது மகன் உடனே 112 அவசர கால எண்ணை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் மில்லியா இஸ்லாமியாவை மீட்டு அருகில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய, தகவல் கிடைத்தவுடன், எங்கள் குழுவும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தை அடைந்தனர். குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் எடுத்துள்ளோம். பாதிக்கப்படவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததால் சந்தேகித்து மனைவியை கொலை செய்துள்ளார். அவர்களுடைய மகள் இன்று காலை இந்த சம்பவம் குறித்து எனக்குத் தெரிவித்தார். அவர்கள் பல நாட்களாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்” என்று கூறினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் பெண்கள், குழந்தைகளூக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, பெண்கள் கொலை செய்யப்படுவது நடந்து வருகிறது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாத நபர்களே விட தெரிந்த நபர்களே  வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.