Pahalgam Attack: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் ஜாலியாக பயணித்த இளைஞர் – அதிர்ச்சி வீடியோ !
Tourist Enjoys Zipline Ride Amid Pahalgam Terror Attack: பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு நடுவே சுற்றுலா பயணி ஒருவர் சிரித்துக்கொண்டே ஜாலியாக பயணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்தியா – பாகிஸ்தான் (Pakistan) இடையே பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஏப்ரல் 28, 2025 அன்று நள்ளிரவில் பூஞ்ச் மற்றும் குப்வரா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் ஆட்டாரி–வாகா எல்லை மூடப்பட்டது. அதன் பிறகு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது, பாகிஸ்தானியர்களை நாடு கடத்துவது போன்ற தீர்மானங்களை அரசு மேற்கொண்டுள்ளது.
இதே நேரத்தில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்கவும் தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.
பஹல்காம் தாக்குதலின் போது ஜிப்லைனில் பயணித்த இளைஞரின் வீடியோ
Zipline operator seen in viral video who was chanting Allahu Akbar and looked like intentionally sending tourist between terrorist attacks has been detained by security forces for questioning in Pahalgam terror attack probe. pic.twitter.com/r5PUSztI01
— Baba Banaras™ (@RealBababanaras) April 28, 2025
ஐம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் இருந்து அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் ஜிப்லைன் மூலம் பயணம் இயற்கை அழகை ரசித்த படி இளைஞர் ஒருவர் மேலே சென்று கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் மிகவும் சிரித்த முகத்துடன் செல்ல, கீழே தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திக்கொண்டிருக்கின்றனர். அது பற்றி எதுவும் தெரியாமல் அவர் மிகவும் ஜாலியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருப்பவர் ரிஷி பட்டா என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், என் ஜிப்லைன் பயணத்தின் இறுதியில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்தேன் உடனே ஜிப்லைனை நிறுத்தி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தேன். பின்னர் என் மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு ஓடத் துவங்கினேன். அப்போது ஜிப்லைன் ஆபரேட்டர் அல்லாஹு அக்பர் என்றார். அப்போது அதனை கேட்பது உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றார்.