Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்.. நடுரோட்டில் செங்கலால் தாக்கிய கணவன்.. ஷாக் பின்னணி!

Hydrabad Crime News : ஹைதராபாத்தில் கர்ப்பிணி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கர்ப்பிணியை, அவரது கணவர் அங்கு கிடந்த செங்கலால் தாக்கியுள்ளார். தலை மற்றும் மார்பகம் என சுமார் 12 முதல் 14 முறை செங்கலால் தாக்கி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்.. நடுரோட்டில் செங்கலால் தாக்கிய கணவன்.. ஷாக் பின்னணி!
கர்ப்பிணியை தாக்கிய கணவன்Image Source: screengrab/pinterest
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Apr 2025 07:24 AM

ஹைதராபாத், ஏப்ரல் 08: ஹைதராபாத்தில் நடுரோட்டில் கர்ப்பிணியை அவரது கணவர் கொடூரமாக தாக்கிய (Husband Attacks Pregnant Wife) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் கர்ப்பிணியை இழுத்து வந்து, அங்கு கிடந்த செங்கலால் அவரை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ வெளியானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பெண்கள், குழந்தைளுக்கு எதிரான வன்முறை, தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்

குறிப்பாக, பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்படுவதாக தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க கடுமையாக சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஒரு கொடூர சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. அதாவது, கர்ப்பிணியை கணவர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கர்ப்பிணியை நடுரோட்டிற்கு இழுத்து வந்து அங்கு கிடந்த செங்கலால் தாக்கி இருக்கிறார்.

இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கச்சிபௌலி என்ற பகுதியில் நடந்துள்ளது. ஹபீஸ்பேட்டை ஆதித்யா நகரைச் சேர்ந்தவர் முகமது பஸ்ரத் (32). அவரது மனைவி ஷபானா பர்வீன் (22). இவர்கள் 2024ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் திருமணமான தொடக்கத்தில் பர்வீன் வீட்டில் பஸ்ரத் வசித்து வந்துள்ளார். பர்வீனின் வற்புறுத்தலின் பேரில், அவர் வசித்து வந்துள்ளார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு இருவரும் வாடகை வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். அப்போது, இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இதனால், இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இப்போது, பர்வீன் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், 2025 மார்ச் 29ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பர்வீன் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்ப்டடார்.

நடுரோட்டில் செங்கலால் தாக்கிய கணவன்

அங்கு சிகிச்சை பெற்ற அவர், 2025 ஏப்ரல் 1ஆம் தேதி குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் வீடு திரும்பும் சின்ன விஷயத்திற்காக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபம் அடைந்த பஸ்ரத், பர்வீனை சாலையில் தள்ளிவிட்டு, தாக்கி இருக்கிறார்.

மேலும், சாலையில் இருந்த ஒரு சிமென்ட் செங்கலை எடுத்து, அவரது தலை மற்றும் மார்பில் பலமுறை தாக்கினார். சுமார் 12 முதல் 14 முறை தொடர்ந்து செங்கலால்  பர்வீனை தாக்கி இருக்கிறார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பர்வீன் இறந்துவிட்டதாக கருதி, பஸ்ரத் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பர்வீனின் அலறல் சத்தத்தை கேட்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்த ரத்த காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

அவரது உடல் நிலை தற்போது மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 2025 ஏப்ரல் 2ஆம் தேதி இரவு பஸ்ரத் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 3ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீசார் கூறினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம்!
சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம்!...
புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்? கடைசி இடத்தில் CSK!
புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்? கடைசி இடத்தில் CSK!...
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!...
உணவுக்குழாய் புற்றுநோய்: பாதிப்புகள் என்னென்ன?
உணவுக்குழாய் புற்றுநோய்: பாதிப்புகள் என்னென்ன?...
ஒரு லட்சம் வரை உயரும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன ?
ஒரு லட்சம் வரை உயரும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன ?...
திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!
திருமண நாளில் கிஃப்ட்.. மீண்டும் தந்தையான விஷ்ணு விஷால்!...
படங்களில் கிளாமர் காட்சி.. சுந்தர்.சி சொன்ன வித்தியாசமான பதில்!
படங்களில் கிளாமர் காட்சி.. சுந்தர்.சி சொன்ன வித்தியாசமான பதில்!...
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்!
பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்!...
திருச்சியை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன? எப்படி செல்வது?
திருச்சியை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன? எப்படி செல்வது?...
என்னோட மோசமான நடிப்பு.. தன் படங்களை சாடிய சமந்தா!
என்னோட மோசமான நடிப்பு.. தன் படங்களை சாடிய சமந்தா!...
நிற்கும் அம்மனுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம் செய்யும் கோயில்
நிற்கும் அம்மனுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம் செய்யும் கோயில்...