மணப்பெண் கொடுத்த டார்ச்சர்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?

மணப்பெண் கொடுத்த துன்புறுத்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய மறுத்த இளைஞரை, இளம்பெண் துன்புறுத்தியுள்ளார். வரதட்சணை புகார் கொடுப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த இளைஞர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மணப்பெண் கொடுத்த டார்ச்சர்..  இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?

மாதிரிப்படம்

Updated On: 

20 Apr 2025 11:41 AM

மகாராஷ்டிரா, ஏப்ரல் 20: மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால மனைவி துன்புறுத்தியால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்தவர் ஹரேராம் சத்யபிரகாஷ் பாண்டே (36). இவர் வருமான வரி அதிகாரியாக உள்ளார். இவருக்கு வாரணாசியைச் சேர்ந்த மோகினி பாண்டே என்பவருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அண்மையில் இவருக்கு நிச்சியதார்த்தம் நடந்தது.

மணப்பெண் கொடுத்த டார்ச்சர்

இருப்பினும், அவர்களின் நிச்சியதார்த்தத்தின்போது, பெண் மோகினி தனது ஆண் நண்பரை கட்டிப்பிடித்ததை ஹரேராம் பார்த்துள்ளார். இதனால், கடுப்பான ஹரேராம், சுரேதஷுடனான உறவை முறித்துக் கொண்டால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கு சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் மோகினி வற்புறுத்தி வந்து இருக்கிறார். ஆனால், இந்த திருமணம் ஹரேராம் மறுத்துள்ளார். ஹரேராமுக்கு எதிராகவும், அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வரதட்சணை வழக்கு தொடருவேன் என்று மோகினி கூறப்படுகிறது.

மேலும், ஹரேராமை தொடர்ந்து மோகினி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், ஹரேராம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரேராமின் வீட்டிற்கு வெளியே மூன்று நான்கு நாட்கள் பழமையான பால் கிடந்ததை பார்த்த அண்டை வீட்டார், உடனே அவரது வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்த அவர் ஹரேராம் சடலமாக கிடந்துள்ளார்.

இளைஞர் எடுத்த விபரீத முடிவு

உடனே, அண்டை வீட்டார் போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த  போலீசார்,  ஹரேராம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவரது மரணம் குறித்து ஹரேராமின் சகோதரர் ஹரேகிருஷ்ணா பாண்டே புகார் அளித்தார்.

இதனை அடுத்து, மோகினி, சுரேஷ் மற்றும் மாயங்க் முனேந்திர பாண்டே என்ற மற்றொரு நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.  தன்னை திருமணம் செய்து கொள்ள பெண் துன்புறுத்தியதால்,  இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்மையில் கூட, கர்நாடகாவில் மனைவி துன்புறுத்தியதால், ஐடி ஊழியர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)