ICU-ல் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
Hospital Technician Arrested for Air Hostess Issue | டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
டெல்லி, ஏப்ரல் 19 : மகாராஷ்டிராவில் (Maharashtra) விமான பணிப்பெண்ணை (Air Hostess) மருத்துமவனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவமனை தொழில்நுட்ப வல்லுநர் (Hospital Technician) கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த பெண் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் (ICU – Intensive Care Unit) அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக்க பார்க்கலாம்.
46 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்
பீகார் (Bihar) மாநிலம், முசாஃபர் (Muzaffar) பகுதியை சேர்ந்தவர் 25 வயதான தீபக் என்ற இளைஞர். இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இந்த இளைஞர் மீது ஏப்ரல் 14, 2025 அன்று காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் தீபக்கை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சுமார் 800 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது மட்டுமன்றி, 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டத்தன் அடிப்படையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த கொடுமை
46 வயதான விமான பணிப்பெண் ஒருவர் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டு இருந்துள்ளார். அவர் ஏப்ரல் 5, 2025 அன்று வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அன்று இரவு தான் அவருக்கு இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். அப்போது தான் சுய நினைவு இல்லாமல் இருந்ததாகவும், ஆனால் தன்னை சுற்றி நடந்தது மற்றும் பேசுவதை தன்னால் கேட்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் அனுமதிக்கப்பட்டு இருந்த அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்த தீபக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் நினைவு திரும்பியதற்கு பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், உரிய விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் காவல்துறை கேட்ட அனைத்து ஆதாரங்களை வழங்கியுள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.