”நீங்களே இப்படி பண்ணலாமா?” மாணவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்த ஆசிரியர்… அதிர்ச்சி வீடியோ!

ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் கொடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் நவீன் பிரதாப் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நடந்துள்ளது.

”நீங்களே இப்படி பண்ணலாமா? மாணவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்த ஆசிரியர்... அதிர்ச்சி வீடியோ!

ஆசிரியர் சஸ்பெண்ட்

Updated On: 

20 Apr 2025 07:40 AM

மத்திய பிரதேசம், ஏப்ரல் 20: மத்திய பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் கொடுப்பது போன்று வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சமூக வலைதளங்களில் வெளியாக வேகமாக பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் பர்வாரா தொகுதிக்கு உட்பட்ட கிர்ஹானி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நவீன் பிரதாப் சிங் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மாணவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்த ஆசிரியர்

இவர் மாணவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. மேலும், அவர் அடிக்கடி பள்ளியில் மதுபானம் அருந்துவதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இந்த நிலையில், இவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த வீடியோவில் ஆசிரியர் நவீன் பிரதாப் சிங், மாணவர்களுக்கு மதுபானம் கொடுப்பது போன்று இருந்துள்ளது. அந்த வீடியோவில், அந்த ஆசிரியர் 5க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கப் ஒன்றில் மதுபானம் வழங்குவதை காட்டுகிறது. மேலும், மதுபபானத்தில் தண்ணீர் கலக்க கூறி, ஒரு மாணவரிடம் கூறுவது போன்று வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆசிரியர், அவர்களை நல்வழிக்கு கொண்டு செல்லாமல், இதுபோன்ற செய்து கண்டிக்கத்தக்கது என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், ஒரு ஆசிரியர் இதுபோன்று செய்யலாமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிர்ச்சி வீடியோ

வீடியோவை அறிந்த மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் யாதவ், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரி ஓ.பி. சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து, ஆசிரியர்  நவீன் பிரதாப் சிங் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தவறான நடத்தை, குழந்தைகளை மது அருந்த ஊக்குவித்தல் மற்றும் ஆசிரியரின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், மத்திய பிரதேச சிவில் சர்வீசஸ் விதிகளின் கீழ் நவீன் பிரதாப் சிங் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.