நள்ளிரவில் பயங்கர தீ விபத்து.. தரைமட்டமான 100 வீடுகள்.. கர்நாடகாவில் பரபரப்பு!
Karnataka Fire Accident: கர்நாடக மாநிலத்தில் ஜலிபெஞ்சி என்ற கிராமத்தில் 2025 ஏப்ரல் 9ஆம் தேதி இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், அங்கிருந்த மக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக தீ விபத்து
கர்நாடகா, ஏப்ரல் 09: கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தில் உள்ள குக்கி கிராமத்தில் திடீரென தீ விபத்து (Karnataka Fire Accident) ஏற்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 8ஆம் தேதி இரவு ஜலிபெஞ்சி என்ற குக்கிராமத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், அப்பகுதியில் மக்களுக்கு சிறிது காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திடீரென பற்றிய தீ
அதாவது, கர்நாடக மாநிலத்தில் ஜலிபெஞ்சி என்ற கிராமத்தில் 2025 ஏப்ரல் 9ஆம் தேதி இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தூக்கிக் கொண்டிருந்த மக்கள் பதறி அடித்து வெளியே வந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் அப்பகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தனர். மேலும், இரண்டு பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், திடீரென அந்தப் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த பலத்த காற்று காரணமாக பழைய மின் கம்பிகள் ஒன்றோடொன்று உறசி தீ பற்றியுள்ளது. இந்த தீ அருகில் இருந்து வீடுகளிலும் பரவியது.
தரைமட்டமான 100 வீடுகள்
இருப்பினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு குல்பர்கா மின்சார விநியோக நிறுவனத்தின் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சேதமடைந்த கம்பிகளை சரிசெய்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஜாலிபெஞ்சியில் உள்ள மின்சார கம்பிகள் பழமையானவை என்றும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதனை அப்போதே சரி செய்திருந்தால் இந்த விபத்து நடத்திருக்காது என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் பல ஆண்டுகளாக புதிய மின் கம்பங்களை கேட்டு வருகிறோம். இப்போது எங்களைப் பாருங்கள். எங்கள் வீடுகள் தீ விபத்தில் சேதம் அடைந்துள்ளன. எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” என்றனர்.
இந்த விபத்து சம்பந்தமான வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மின் கம்பங்களில் இருந்து தீப்பொறிகள் எழுவதும், வீடுகள் தீப்பற்றி ஏரிவதும் வீடியோவில் உள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் விரிவான சேதத்தைக் காட்டுகின்றன. மேலும், டிவி, குளிர்சாத பெட்டிகள் போன்ற வீட்டு உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும சோக