டென்ஷனான முதல்வர்.. மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா.. வெளியான வீடியோ!
karnataka CM siddaramaiah: கர்நாடக முதல்வர் சித்தராமையா பொது நிகழ்ச்சி மேடையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை அடிக்க கை ஓங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சித்தராமையாவின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகா, ஏப்ரல் 29: கர்நாடக மாநிலம் பெலகாவியில் பொதுக் கூட்ட மேடையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை முதல்வர் சித்தராமையா அடிக்க கை ஓங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மேடையில் போலீசாரை அடிக்க ஓங்கிய சித்தராமையாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகினறனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் புதிய புயலை கிளப்பியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நிகழ்ச்சி ஒன்றில் 2025 ஏப்ரல் 28ஆம் தேதியான நேற்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி பெலகாவியில் நடந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் இருந்தனர்.
மேலும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இருந்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு அருகில் பாஜக பெண் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான பாதுகாப்பை நிர்வகிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பரமணி(ஏஎஸ்பி) நியமிக்கப்பட்டிருந்தார்.
எனவே, நிகழ்ச்சிக்கு அருகில் பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், டென்ஷனான சித்தராமையா, ஏஎஸ்பி பரமணியை மேடைக்கு அழைத்து, அவரை பகிரங்கமாக கடிந்து, அவரை அடிப்பதற்கு கை ஓங்கி இருக்கிறார். ஆனால், அவரை தாக்கவில்லை.
வெளியான வீடியோ
,@siddaramaiah ನಿಮಗೆ ಅಧಿಕಾರದ ದರ್ಪ ತಲೆಗೇರಿದೆ.
ಜಿಲ್ಲಾ ಪೊಲೀಸ್ ವರಿಷ್ಠಾಧಿಕಾರಿಗೆ ಹೊಡೆಯಲು ಕೈ ಎತ್ತುವುದು ನಿಮ್ಮ ಸ್ಥಾನಕ್ಕೆ, ಘನತೆಗೆ ಕಿಂಚಿತ್ತೂ ಶೋಭೆ ತರುವುದಿಲ್ಲ.
ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಸ್ಥಾನದಲ್ಲಿರುವ ನೀವು, ಬೀದಿ ರೌಡಿಯಂತೆ ಸಾರ್ವಜನಿಕ ವೇದಿಕೆಯಲ್ಲಿಯೇ ಏಕವಚನ ಪ್ರಯೋಗಿಸಿ, ಎಸ್ಪಿ (SP)ಗೆ ಹೊಡೆಯಲು ಯತ್ನಿಸಿದ್ದು ಅಕ್ಷಮ್ಯ… pic.twitter.com/GXeZbtk73t
— Janata Dal Secular (@JanataDal_S) April 28, 2025
பொது மேடையிலேயே நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் மத்தியில், காவல்துறை அதிகாரியை சித்தராமையா அடிக்க கை ஓங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சூழ்ந்திருந்த மேடையில் நின்ற சித்தராமையா, அதிகாரியை அழைத்து, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் மக்கள் எப்படி எதிர்ப்புத் தெரிவிக்கவும், கருப்புக் கொடிகளை அசைக்கவும் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கேட்டார்.
மேலும், ” ஏய், இங்கே வா, எஸ்பி யார்? நீங்க என்ன பண்றீங்க?” என கேட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, ஏஎஸ்பியை அடிக்க கை ஓங்கியிருப்பதை வீடியோ காட்டுகிறது. முதல்வர் சித்தராமையாவின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
சித்தராமையாவின் செயலுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கண்டனம் தெரிவித்தது. அதாவது, ” காவல்துறை அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.