Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“பவன் கல்யாண் தான் காரணம்.. வாழ்க்கையே போச்சு” மாணவர்கள் வேதனை!

Pawan Kalyan Convoy: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஜேஇஇ தேர்வை தவறவிட்டதாக 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று விசாகப்பட்டினம் காவல்துறைக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார்.

“பவன் கல்யாண் தான் காரணம்.. வாழ்க்கையே போச்சு” மாணவர்கள் வேதனை!
பவன் கல்யாண்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Apr 2025 11:39 AM

விசாகப்பட்டினம், ஏப்ரல் 08: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஜேஇஇ தேர்வு தவறவிட்டதாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். அதாவது, விசாகப்பட்டினத்தின் பெண்டுர்த்தியில் உள்ள அயன் டிஜிட்டல் தேர்வு மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஜேஇஇ தேர்வை தவறவிட்டதாக கூறியுள்ளனர். இந்த தேர்வு மையத்தை சேர்ந்த மாணவர்கள் 2025 ஏப்ரல் 8ஆம் தேதி தேர்வு எழுதுவதற்காக விசாகப்பட்டினத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

பவன் கல்யாணின் கான்வாய் வாகனம்

அப்போது, அந்த வழியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்கள் சென்றுள்ளன. இதனால் போலீசார் பொதுமக்கள் செல்லும் பாதையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். இதனால், மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுத தாமதமாக சென்றுள்ளனர்.

இதனால், தேர்வு எழுத முடியாததாக அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனால், வருத்தமடைந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறினர். இதுகுறித்து பேசிய மாணவரின் தாய் கலாவதி, “நாங்கள் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டோம்.

துணை முதல்வர் பவன் கல்யாணம் வாகனம் சென்றுக் கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் எனது மகனின் எதிர்காலமே கேள்வி குறியாகி உள்ளது” என்றார். மற்றொரு மாணவரின் பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தேர்வை மறுபரிசீலனை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு துணை முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 ஜேஇஇ தேர்வு எழுதாத மாணவர்கள்

இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த மாநிலத்தில் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவைப்படுகிறது.

தனது சினிமா பிம்பத்திற்கு உண்மையாக இருக்கும் நடிகர்-அரசியல்வாதி, பொது அலுவலகத்தை ஒரு பிரஸ் மீட் நிகழ்வை போல நடத்துகிறார். சினிமா தருணங்களுக்கு கைதட்டுவதை நிறுத்திவிட்டு உண்மையான பொறுப்புணர்வை கோரத் தொடங்க வேண்டிய நேரம் இது” என விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தனது கான்வாய் காரணமாக ஜேஇஇ தேர்வு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உத்தரவிட்டுள்ளார். மேலும், கான்வாய்க்கு எவ்வளவு நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, மாணவர்கள் செல்லும் போது தேர்வு மையத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நிலைமைகள் மற்றும் சர்வீஸ் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரிக்க விசாகப்பட்டினம் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், காவல்துறை இந்தக் கூற்றுக்களை நிராகரித்து, மாணவர்கள் காலை 7 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது என்றும், இந்த 30 மாணவர்களும் சரியான நேரத்தில் வந்திருந்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் கூறினர்.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...