Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்.. துப்பாக்கியுடன் பயங்கரவாதி.. வெளியான பகீர் போட்டோ!

Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த தீவிரவாதி கையில் துப்பாக்கியுடன் இருப்பதை காட்டுகிறது.

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்.. துப்பாக்கியுடன் பயங்கரவாதி.. வெளியான பகீர் போட்டோ!
பயங்கரவாதி புகைப்படம்Image Source: X/PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Apr 2025 09:43 AM

ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 23:  ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய (Pahalgam Terror Attack) தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதலுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியின் ( PahalgamTerrorist Photo) புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தீவிரவாதி கையில் துப்பாக்கியுடன் இருப்பதை காட்டுகிறது. இந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்

2025 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தளமான பெஹல்காமில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் பைசாரன் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த இடம் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

இந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்த இடத்திற்கு 2025 ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் குறித்து சத்தம் கேட்டதும் பொதுமக்கள் அங்கிருந்து, தலைதெறிக்க ஓடி, மறைந்தனர்.

இருப்பினும், பயங்கரவாதிகள் தாக்குதல்  நடத்தியதில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் கர்நாடக, மகாராஷ்டிரா,  ஹரியான உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

வெளியான பகீர் போட்டோ

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த 6க்கும மேற்பட்ட பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  எனவே, பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய  பயங்கரவாதி ஒருவரின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் பயங்கரவாதி கையில் துப்பாக்கியுடன் இருப்பதை காட்டுகிறது.

ஏகே-47  துப்பாக்கியை கையில் வைத்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும், படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்த புகைப்படம் சோஷியில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படை விரைவில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில் இருந்து பிரதமர் மோடி, 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று அதிகாலை அவசரமாக டெல்லிக்கு வந்தடைந்தார். பிரதமர் மோடி தலைமையில், பஹல்கான் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

பகலில் வேலை செய்வது போர் - ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்
பகலில் வேலை செய்வது போர் - ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்...
பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள்? வெளியான வரைபடம்!
பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள்? வெளியான வரைபடம்!...
கார் வேண்டாம்.. நேராக மீட்டிங் - பிரதமர் மோடியின் அவசர ஆலோசனை!
கார் வேண்டாம்.. நேராக மீட்டிங் - பிரதமர் மோடியின் அவசர ஆலோசனை!...
"மோடியிடம் போய் சொல்" பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி!
பேட்டிங்கில் சொதப்பல்! ரூ.27 கோடி எதற்கு? பண்ட்-ஐ விளாசும் பேன்ஸ்
பேட்டிங்கில் சொதப்பல்! ரூ.27 கோடி எதற்கு? பண்ட்-ஐ விளாசும் பேன்ஸ்...
ஹனிமூன் சென்ற கடற்படை வீரர் மனைவி கண்முன்னே சுட்டுக்கொலை..!
ஹனிமூன் சென்ற கடற்படை வீரர் மனைவி கண்முன்னே சுட்டுக்கொலை..!...
டாஸ்மாக் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
டாஸ்மாக் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு...
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் தீபாவளிக்கு முன் திறப்பு
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் தீபாவளிக்கு முன் திறப்பு...
நெருங்கும் அட்சய திரிதியை... அதிரடியாக குறைந்த தங்கம் விலை
நெருங்கும் அட்சய திரிதியை... அதிரடியாக குறைந்த தங்கம் விலை...
பஹல்காம் தாக்குதல்.. உடனே அழைத்த அமெரிக்க அதிபர்!
பஹல்காம் தாக்குதல்.. உடனே அழைத்த அமெரிக்க அதிபர்!...
துப்பாக்கியுடன் பயங்கரவாதி.. வெளியான பகீர் போட்டோ!
துப்பாக்கியுடன் பயங்கரவாதி.. வெளியான பகீர் போட்டோ!...