முதல்வருக்கே இப்படியா? திருப்பி விடப்பட்ட விமானம்.. கடுப்பான உமர் அப்துல்லா!

Jammu Kashmir CM Omar Abdullah: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பயணித்த இண்கோ விமானம் ஜெய்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான உமர் அப்துல்லா, டெல்லி விமான நிலையத்தை சாடியுள்ளார். மேலும், நள்ளிரவில் 1 மணிக்கு விமானத்தில் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வருக்கே இப்படியா? திருப்பி விடப்பட்ட விமானம்.. கடுப்பான  உமர் அப்துல்லா!

முதல்வர் உமர் அப்துல்லா

Updated On: 

20 Apr 2025 08:22 AM

டெல்லி, ஏப்ரல் 20: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா (CM Omar Abdullah) பயணித்த இண்டிகோ விமானம் (Indigo flight diverted) டெல்லி செல்லாமல், ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது. இதனால், கடுப்பான உமர் அப்துல்லா, டெல்லி விமான நிலையத்தின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். 2025 ஏப்ரல் 19ஆம் தேதியான நேற்று ஜம்மு காஷ்மீரில் இருந்து முக்கிய வேலையாக முதல்வர் உமர் அப்துல்லா டெல்லி செல்வதற்கான இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு சென்றார். டெல்லியில் விமானம் தரையிறங்க வேண்டிய நிலையில், ஜெய்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

திருப்பி விடப்பட்ட இண்டிகோ விமானம்

அதாவது, வழி கிடைக்காமல், விமானம் தரையிறங்க முடியாமல் மூன்று மணி நேரமாக வானத்திலேயே வட்டமடித்தது. மூன்று மணி வானித்திலேயே விமானம் வட்டமடித்த நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு ஜெய்பூரில் தரையிறங்கியது.

பிறகு, 3 மணி வாக்கில் விமானம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு தரையிறங்கியது.  இந்த நிலையில்,  இண்டிகோ விமானம் டெல்லிக்கு செல்லாமல் மூன்று மணி வானத்திலேயே வட்டமடித்து நள்ளிரவு 1 மணிக்கு ஜெய்பூருக்கு தரையிறங்கியதால் பயணிகள் பலரும்  சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும், அந்த விமானத்தில் பயணித்த முதல்வர் உமர் அப்துல்லா கடுப்பாகி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன்  டெல்லி ஏர்போட்டின் செயல்பாட்டை கடுமையாக சாடியுள்ளார்.

கடுப்பான முதல்வர் உமல் அப்துல்லா


எக்ஸ் தளத்தில் உமர் அப்துல்லா கூறுகையில், “டெல்லி விமான நிலையம் ஒரு மோசமாக இருக்கிறது. மன்னிக்கவும். நான் கண்ணியமாக நடந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. ஜம்மு காஷ்மீரில் இருந்து இண்டிகோ விமானம் புறப்பட்டு 3 மணி நேரம் வானத்தில் வட்டமடித்த பிறகு, நாங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டோம்.

அதனால் நான் அதிகாலை 1 மணிக்கு விமானத்தின் படிகளில் ஏறி, புதிய காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். இங்கிருந்து எத்தனை மணிக்குப் புறப்படுவோம் என்று எனக்குத் தெரியவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு பிறகு தான் டெல்லி வந்தடைந்தேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட டெல்லி விமான நிலைய நிர்வாகம், “காற்று மாறி வருவதால் விமான நிறுவனங்கள் தாமதங்களை சந்தித்து வருகிறது. எந்தவொரு சிரமத்திற்கும் நாங்கள் மனதார வருந்துகிறோம், உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஜம்மு காஷ்மீரில் 2025 ஏப்ரல் 19ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஜம்மு விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகி ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். இதனால் பல இணைப்பு விமானங்களும் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.