Tourist attack in Pahalgam: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு.. 5 சுற்றுலா பயணிகள் காயம்!

Jammu and Kashmir Attack: தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைஸ்ரான் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். இது ஒரு குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அப்பகுதி பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tourist attack in Pahalgam: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு.. 5 சுற்றுலா பயணிகள் காயம்!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்

Published: 

22 Apr 2025 16:30 PM

காஷ்மீர், ஏப்ரல் 22: தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் (J&K’s Pahalgam) பைஸ்ரான் என்ற பகுதியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 சுற்றுலா பயணிகள் (5 Tourists) காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு படையினர் உடனடியாக விரைந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்கள் பாதுகாப்பிற்குள் எடுத்தனர். மருத்துவ குழுவினரும் விரைந்து அப்பகுதியில் காயமடைந்த சுற்றுலா பயணிகளுக்கு போதுமான முதலுதவியை செய்து, பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது, அந்த பகுதிக்குள் நடந்து அல்லது குதிரை மூலமாக மட்டுமே அப்பகுதி மக்கள் செல்ல முடியும்.

என்ன நடந்தது..?

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான பைஸ்ரான் புல்வெளியில் நடந்த தாக்குதலில் 2 உள்ளூர் மற்றும் 3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் துப்பாக்கிச்சுட்டால் காயங்கள் அடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு பெண் சுற்றுலா பயணி, காஷ்மீர் காவல்துறையின் பிசிஆர் எண்ணுக்கு அழைத்து, பயங்கரவாதிகள் தன் மீதும் தன் கணவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த தனது கணவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பான காட்சிகள்:

தாக்குதல் நடந்த உடனேயே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிக்க சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடுதல் படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சமீபத்தில் பயணம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது அமித் ஷா ஜம்மு பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும், ஊருருவல் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.