Jammu and Kashmir Floods: ஜம்மு காஷ்மீரில் கொட்டிதீர்த்த கனமழை.. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழப்பு..!
Ramban Flash Floods: ராம்பன் மாவட்டத்தில் தரம்குண்ட் கிராமத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் உயிரிழந்தது மட்டுமின்றி, ஒருவர் காணாமல் போயுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு உண்மையாகிவிட்டது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன. வீடுகள் மற்றும் உடமைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.

ஜம்மு – காஷ்மீர் (Jammu and Kashmir) ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு அருகிலுள்ள தரம்குண்ட் கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இடைவிடாத மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் (Landslide) ராம்பனில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) மேற்கு திசைதிருப்பல் புயல் தீவிரமடைவதையும், உயரமான மலை பகுதிகளில் அதன் தாக்கத்தையும் கணித்திருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு ஜம்மு காஷ்மீரில் உண்மையாகிவிட்டது.
கனமழை:
2025 ஏப்ரல் 19ம் தேதியான நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய அடைமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதுக்கப்பட்டது. பல வீடுகளும் சாலைகளும் அழிக்கப்பட்டு, முற்றிலும் சேதமடைந்தது. மேலும், பலத்த நீர் ஓட்டம் காரணமாக நெடுஞ்சாலை முற்றிலுமாக சேதமடைந்தது. இயற்கை பேரழிவில் பலர் இறந்திருக்கலாம் என்றும், ராம்பன் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் உள்ளூர் நிர்வாகமும், காவல்துறையும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த இயற்கை பேரழிவால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச சூழல் நிலவி வருகிறது.
பல வீடுகள் சேதம்:
This morning, flash Floods and Landslide Hit Dharamkund, Ramban, Jammu and Kashmir (India)
Multiple houses were destroyed
Around 90–100 people were safely rescued
Three people died, one is missing
A landslide buried multiple vehicles and caused further damage https://t.co/jwPcNWoe1Q pic.twitter.com/HXYp1aVfA2
— Weather Monitor (@WeatherMonitors) April 20, 2025
ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பனின் ரதம் குண்ட் கிராமத்தில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 100க்கு மேற்பட்ட கிராமவாசிகள் சிக்கி தவித்த காவல்துறையினர் மீட்கப்பட்டனர். தற்போது காவல்துறையினரும், பேரிடர் மீட்ப்ய் குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உதம்பூரில் உள்ள சதேனி பஞ்சாயத்தின் முன்னாள் சர்பஞ்ச் புருஷோத்தம் குப்தா கூறுகையில், “கனமழைக்கு பிறகு, எனது கிராமத்தை நான் ஆய்வு செய்தேன். இந்த பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 4-5 ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வளவு பலத்த காற்று அந்த பகுதியை தாக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் மற்றும் கற்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வானிலை சீரடைந்து சாலை சீராகும் வரை பயணிகள் இந்த முக்கிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டாம் என்றும் போக்குவரத்துத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ரியாசி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 2 பேர் மற்றும் சுமார் 40 ஆடுகள் உயிரிழந்தன.
ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழ மரங்கள் மற்றும் பயிர்கள் தவிர கிட்டத்தட்ட 100 வீடுகள் சேதமடைந்தன.