தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றமா..? ஐஆர்சிடிசி முக்கிய அறிவிப்பு!

IRCTC: தட்கல் ரயில் டிக்கெட் நேர மாற்றம் குறித்து பரவும் செய்திகள் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் நேரம் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தெளிவுபடுத்தியுள்ளது.

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றமா..? ஐஆர்சிடிசி முக்கிய அறிவிப்பு!

ஐஆர்சிடிசி விளக்கம்

Updated On: 

12 Apr 2025 09:06 AM

சென்னை ஏப்ரல் 12: தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் நேரம் (Tatkal train ticket booking time) மாற்றம் செய்ததாக பரவும் தகவல் தவறு என்று இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation ) விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் நேரம் மாற்றம் குறித்து தவறான செய்திகள் பரவி வருகின்றன. இதில் உண்மையில்லை எனவும், தற்போது உள்ள முன்பதிவு நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணி, மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு தட்கல் பதிவு துவங்குகிறது. பிரீமியம் தட்கல் வசதியும் இதில் உள்ளதுடன், விலை தேவைக்கேற்ப உயரும். இருந்தாலும், இரண்டு வசதிகளுக்குமான பதிவு நேரம் ஒன்றாகவே உள்ளது. IRCTC பயணிகளுக்கு வதந்திகளை நம்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்

IRCTC என்பது Indian Railway Catering and Tourism Corporation எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஆகும். இது இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு துணை நிறுவனம். என்பது இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு துணை நிறுவனம் ஆகும். இதன் முக்கிய பணிகளில், ஆன்லைன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு, தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் வசதிகள், ரயில்களில் உணவு வழங்கும் சேவைகள், சுற்றுலா திட்டங்கள் மற்றும் இ-கேட்டரிங் உள்ளிட்ட சேவைகள் அடங்கும்.

பயணிகள் www.irctc.co.in என்ற இணையதளம் அல்லது IRCTC செயலி வழியாக இந்த சேவைகளை பெறலாம். IRCTC, தனது டிஜிட்டல் சேவைகளால் பயணிகள் அனுபவத்தை எளிமையாக்கும் வகையில் பல வசதிகளை வழங்கி வருகிறது.

சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள்

சமூக வலைதளங்களில், ஏ.சி. மற்றும் ஏ.சி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கூறி சில பதிவுகள் பரவி வருகின்றன. இது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ விளக்கம்

இது தொடர்பாக IRCTC தனது அதிகாரப்பூர்வ இணையதளமான IRCTC எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முன்பதிவுக்கான நேரங்களில் எந்தவிதமான மாற்றமும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை. பயணிகளுக்காக ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்கள் மாறாமல் தொடருகின்றன,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி முக்கிய அறிவிப்பு!

 

தட்கல் டிக்கெட் பதிவு நேரம் – தற்போதைய நடைமுறை

  • உடனடியாக ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், பயணத்துக்கு 24 மணி நேரத்திற்கு முன் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
  • ஏ.சி. வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 10 மணி முதல் தொடங்குகிறது.
  • படுக்கை வசதி உள்ள மற்ற வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்குகிறது.

இதில் “தட்கல்” மற்றும் “பிரீமியம் தட்கல்” என இருவித வசதிகள் உள்ளன. பிரீமியம் தட்கலில், வாடிக்கையாளர்கள் சற்றே அதிக கட்டணத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும். ஆனால், இரண்டு வகைகளுக்கும் முன்பதிவு நேரம் ஒன்றுதான்.

வதந்திகளை நம்ப வேண்டாம் – IRCTC வேண்டுகோள்

இந்நிலையில், தட்கல் மற்றும் பிரீமியம் தட்கலுக்கான முன்பதிவு நேரம் வேறுபடுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை எனவும், பயணிகள் உறுதியாக இருக்கலாம் எனவும் IRCTC உறுதியளித்துள்ளது.