இந்தியாவின் டாப் 3 பணக்கார மாநிலங்கள் இவைதான்.. தமிழகத்திற்கு எந்த இடம்?

India's Richest States | சமீபத்தில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான ஹூருன் குளோபல் பட்டியலில் உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட மூன்றாவது நாடு என்ற இடத்தை இந்தியா பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் பணக்கார மாநிலம் எது, முதல் மூன்று இடங்களில் இருக்கும் மாநிலம் எது என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் டாப் 3 பணக்கார மாநிலங்கள் இவைதான்.. தமிழகத்திற்கு எந்த இடம்?

மாதிரி புகைப்படம்

Published: 

11 Apr 2025 13:08 PM

இந்தியா பொருளாதாரத்தில் (Economy) மிக வேகமாக வளர்ந்துக்கொண்டே செல்கிறது. இதன் சான்றாக சமீபத்தில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் உலக அளவில் அதிக பணக்காரர்களை (Most Number of Billionaires) கொண்ட மூன்றாவது நாடாக  இந்தியா உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளாக உள்ள அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஈடாக இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது. உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், இந்தியாவில் எந்த மாநில அதிக பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிக பணக்காரர்களை கொண்டு உலக அளவில் 3வது இடம் பிடித்த இந்தியா

சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஹூருன் குளோபல் பட்டியல் (Hurun Global List 2025) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் நிகழ்த்தியுள்ள சாதனையை குறிப்பிடும் வகையில் இருந்தது. அதாவது இந்தியாவில் சுமார் 284 பில்லினியர்கள் உள்ளதாகவும், அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதமாக உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும்  இந்த பில்லினியர்களின் மொத்த சொத்து மதிப்பு 98 லட்சம் கோடியாக உள்ளதாகவும், அது இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய GDP (Gross Domestic Product)-யை கொண்ட நாடு என்ற இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பணக்கார மாநிலம் எது?

உலக அளவில் அதிக பணக்கார்ரகளை கொண்ட மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்தியாவில் எந்த மாநிலம் அதிக ஜிடிபியை கொண்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?. இந்தியாவை பொருத்தவரை அதிக ஜிடிபி கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உத்தர பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்த மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் பணக்கார மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இது இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 13.3 சதவீதத்தை கொண்டுள்ளது. மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் திரைத்துறை, வணிக கழகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ள நிலையில், அவை முக்கிய பொருளாதார காரணிகளாக கருதப்படுகின்றன. மும்பையில் மட்டும் 90 மில்லினியர்கள் உள்ளனர். இரண்டாவது இடத்தை பிடித்துள்ள தமிழ்நாடு சிறந்த பொருளாதாரம் வளம் கொண்ட மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் தமிழ்நாடு 8.9 சதவீதம் அங்கம் வகிக்கிறது. பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள மாநிலம் தான் உத்தர பிரதேசம். உத்தர பிரதேசம் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 8.4 சதவீதம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.