Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீயாய் தகிக்கும் மொழி பிரச்னை.. இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் மக்கள்!

நம்முடைய இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களில் வசிக்கும் பிற மாநில மக்களுக்கும், அந்தந்த மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது அவசியம். அதனை ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால் மொழி சார்ந்த வெறுப்புணர்வு பிரச்சாரங்களை எதிர்க்க வேண்டிய நிலையில் சமூகம் வந்து விட்டது.

தீயாய் தகிக்கும் மொழி பிரச்னை.. இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் மக்கள்!
மொழி பிரச்னை
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 Apr 2025 16:14 PM

இந்தியா பன்முகத் தன்மை (Diversity) கொண்ட நாடு. இங்கு பல தரப்பட்ட மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். பல்வேறு மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், உடைகள், பழக்க வழக்கங்கள், உணர்வுகள் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மொழி பேசும் மக்கள் இந்த மாநிலத்தில் மட்டும் தான் உள்ளார்கள் என்பதெல்லாம் இல்லை. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி (Kanniyakumari) வரை அனைத்து மொழி பேசும் மக்களும் உள்ளனர். ஆனால் சமீப காலமாக இந்தியாவில் எழுந்து வரும் மொழி தொடர்பான பிரச்னைகள் (Language Row) பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் அரசியல் உள்ளது. சாமர்த்தியமாக மொழி திணிப்பு நடக்கிறது என்றெல்லாம் காரணம் கூறப்பட்டாலும் சாமானிய மக்களின் பார்வையில் அணுகினால் இது கவலைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுவதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

கல்வி வகையில் இந்தி திணிப்பு நடப்பதாக சொல்லப்படுகிறது. அத்தகைய கல்வி என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. அதனை அனைவருக்கும் சமமாக அரசு வழங்க வேண்டும். ஆனால் கல்வி வியாபாரமாகி விட்ட சூழலில் அதில் சம வாய்ப்பை எதிர்ப்பார்ப்பது என்பது சரியானது கிடையாது. பணம் இருந்தால் சகல வசதிகளுடன் கூடிய கல்வி, இல்லாவிட்டால் அடிப்படை கல்வி இப்படித்தான் இந்த சமூக நிலை உள்ளது. இதை மறுக்கவும் முடியாது.

கற்கண்டா? அல்லது பாகற்காயா?

இங்கு யாரும் மொழிக்கு எதிரி கிடையாது என சொல்கிறார்கள். ஆனால் கற்றுக் கொடுக்கும்போது தான் மாணவர்களுக்கு அது கற்கண்டாக இனிக்குமா இல்லை பாகற்காயாக கசக்குமா என்பதையே நம்மால் முடிவு செய்ய முடியும். தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களில் பலருக்கும் தமிழ், ஆங்கிலம் ஆகியவை இன்றும் இப்படியாகவே உள்ளது. சிலர் மாற்று மொழிக்கு முயற்சி செய்து அதில் வெற்றி அல்லது தோல்வியை நோக்கி செல்கிறார்கள்.

கற்றது கைக்கொடுக்கும், அல்லது அனுபவம் கைக்கொடுக்கும் என சொல்வார்கள். அப்படித்தான் இதுவரை சென்று கொண்டிருக்கிறது. ஆங்கிலம் எடுத்தவுடன் பேசும் அளவுக்கு நாம் திறமைசாலியாக இருக்க முடியாது. ஒருவர் கற்றுத்தர வேண்டும், அதை எழுதி, பேசிப் பழகினால் மட்டுமே நமக்குள் உணர்வாக மாறும். இங்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான தாய்மொழி என்பது உள்ளது. அதனால் அந்த மொழி பேசுபவர்கள் ஒரே மாநிலத்திற்குள் மட்டுமே சுருங்கி விட மாட்டார்கள்.

சமூகத்தின் அடுத்தக் கட்ட பிரச்னை

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்ட்ராவில் வசிக்கும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மராத்தி மொழி பேச  முடியாது என சொன்னால் அவர்கள் கன்னத்தில் அறையுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருக்கிறார். இப்படியான நிலையில் பள்ளியில் ஆரம்பித்த மொழி பிரச்னை இன்றைக்கு சமூகத்தின் அடுத்தக் கட்டத்துக்கு வந்துள்ளது. இது தேவையில்லாத பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். என் மாநில மொழியை தெரிந்து கொள்ளுங்கள் என ஒருவரை ஊக்குவிக்கலாம். மாறாக திணிக்கவோ, வன்முறை தூண்டும் வகையிலோ பேசக்கூடாது.

சிலருக்கு தாய் மொழி தவிர்த்து பிற மொழிகள் பேச தெரியும் அல்லது மற்ற மொழிகள் பேசுபவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என புரிந்து கொள்ளவாவது முடியும். அவர்களுக்கு நம் மாநில மொழி தெரியவில்லையே என ஆதங்கத்தைக் கொட்டக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஒருகட்டத்தில் நாம் ஓரிடத்தில் நிலைக்க வேண்டும் என்றால் அவர்களாகவே இன்னொரு மொழியை கற்க ஆர்வம் காட்டுவார்கள். அப்படித்தான் இந்தியாவில் வழக்காடு மொழியாக இருக்கும் தாய்மொழியும், ஆங்கிலமும்.

தேவை என வரும்போது பிற மொழிகளைக் கற்பவர்கள் இருப்பார்கள். சிலர் முயற்சி செய்து பார்ப்போம் என நினைப்பார்கள். ஆனால் யாரும் வேண்டாம் என ஒதுக்க மாட்டார்கள். இப்படியான சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். ஆனால் வெறுப்புணர்வு கருத்துகளை கூறி மக்களைப் பிளவுப்படுத்த வேண்டாம் என்பது பலருடைய கோரிக்கையாக உள்ளது.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...