பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர், மீட்கும் முயற்சியில் இந்தியா – பரபரப்பு சம்பவம்
Pakistan detains Indian soldier : தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த .பி.கே.சிங் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் இருந்து துப்பாக்கி வாக்கி, டாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி, ஏப்ரல் 24: பஹல்காமில் (Pahalgam) நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் 24, 2025 வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) அரசியல் கட்சிகளுக்கு பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கமளித்தார். கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறு நடந்துள்ளதாக ஒப்புக்கொண்டதாகவும், எதுவும் நடக்கவில்லை என்றால் நாம் ஏன் இங்கே அமர்ந்திருக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் உளவுத்துறையின் தோல்வி மற்றும் பாதுகாப்பு குறைபாடு பற்றிய பிரச்னையை எழுப்பின. இந்த நிலையில் மத்திய அரசு சார்பில், இந்த முறை, உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் அரசாங்கத்திற்குத் தெரிவிக்காமல் சுற்றுலா முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கினர், மேலும் ஏப்ரல் 20, 2025 முதல் சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர். இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரியாது. இதன் காரணமாக, அங்கு படையினர் குவிக்கப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
Delhi: Leaders pay homage to Pahalgam terror attack victims with 2-minute silence
Read @ANI Story | https://t.co/DMSRJWf5Q0#PahalgamTerroristAttack #JammuandKashmir #AllPartyMeeting pic.twitter.com/Bju3VngyI1
— ANI Digital (@ani_digital) April 24, 2025
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒற்றுமையாகப் போராட வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வலுவான நடவடிக்கை எடுத்துள்ளது, எதிர்காலத்திலும் அதைத் தொடரும். இது குறித்து அரசின் சார்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
“சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது, உண்மையில் அனைத்து அரசியல் தலைவர்களும் பாகிஸ்தான் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு எடுத்த நடவடிக்கையை ஒருமனதாக ஆதரித்தனர். கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் நமது நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சகிப்புத்தன்மை கூடாது என்பதை வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். மேலும் அனைத்து தலைவர்களும் மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்களது ஆதரவை தெரிவிப்பதாக கூறினர். என்றார்.
பாகிஸ்தான் பிடியில் இந்திய ராணுவ வீரர்
தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த .பி.கே.சிங் சிறைபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றும் கொல்கத்தாவை சேர்ந்ந்த பி.கே.சிங் பஞ்சாப், ஃபிரோஸ்பூர் அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்திருக்கிறது. அவரிடம் இருந்து துப்பாக்கி வாக்கி டாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரை மீட்கும் பணி நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.