சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா.. போராக கருதப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை!

India Stopped Indus River Water to Pakistan | பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சிந்து நதிநீரை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்தியா, சிந்து நதிநீரை நிறுத்தினால் போராகக் கருதப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா.. போராக கருதப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை!

பிரதமர் நரேதிர மோடி

Updated On: 

24 Apr 2025 19:29 PM

சென்னை, ஏப்ரல் 14 : பாகிஸ்தானை (Pakistan) சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஜம்மு & காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgham) பகுதியில் இந்தியர்களை சுட்டு படுகொலை செய்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை (Indus River) இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இதற்கிடையே, சிந்து நதிநீரை நிறுத்தினால் போராகக் கடுதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்திய அரசு நிறுத்தியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜம்மு & காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட 27 சுற்றுலா பயணிகள்

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 22 ஏப்ரல் 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 27 சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்திய சுற்றுலா பயணிகளின் உயிரை பரித்த பயங்கரவாத அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்திய அரசு நிறுத்தியுள்ளது.

சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா

பாகிஸ்தான் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தியுள்ளது. ஜம்மு & காஷ்மீரின் ராம்பன் எனும் பகுதியில் பாக்லிகார் என்ற அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து செனாப் நதிக்கரையில் இருந்து நதிநீர் பாகிஸ்தானுக்கு சென்று வந்தது. இந்த நதிநீரை பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறித்தும் வரை வழங்க மாட்டோம் என மத்திய அரசு நேற்று (ஏப்ரல் 23, 2025) அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (ஏப்ரல் 24, 2025) ராம்பன் அணையின் மதகுகளை மூடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்தி இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையே சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தினால் அது போராகக் கருதப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, முப்படைகளையும் தயாராக இருக்க கோரி அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.