உஷார் மக்களே.. வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் எப்படி?

Soutwest Monsoon: 2025ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது, நாட்டில் 2025ஆம் ஆண்டு பருவமழை 105 சதவீத மழைப் பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.

உஷார் மக்களே.. வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் எப்படி?

தென்மேற்கு பருவமழை

Updated On: 

16 Apr 2025 09:54 AM

சென்னை, ஏப்ரல் 16 : இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை (Soutwest Monsoon) பல மாநிலங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பில் இருந்து குறைவாகவே பதிவாகும் எனவும் கணித்துள்ளது. இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பவர் வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும்.

வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை

இதில், தமிழகத்தில் பெரும்பாலான நீர் தேவையை வடகிழக்கு பருவமழை பூர்த்தி செய்யும். தென்மேற்கு பருவமழை குறைவான மழை பொழிவையே கொடுக்கும்.  இருப்பனும், கொளுத்தும் வெயிலுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை வருவதால், அதிக  மழை  பொழிவை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

கடந்த 2024ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் நன்றாக பெய்தது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு  நாட்டில் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.  அதன்படி,  இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் இயல்பை விட அதிகமாக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக 87 செ.மீ மழை பதிவாகும் நிலையில், 2025ஆம் ஆண்டு 105 செ.மீ மழை பதிவாகும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் எப்படி?

 

ஒரு சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்றும் நான்கு மாத பருவமழை காலத்தில் லடாக், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், மழை தொடர்பாக 2025 மே மாதத்திற்கு மற்றொரு அறிக்கை வெளியிடப்படும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தால் விவசாயிகளுக்கு பெரிதும் உதவும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்கு இருப்பதால், இந்த கணிப்பு விவசாயத்திற்கும், பொருளாதாரத்திற்கு உத்வேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.