கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்.. கடைசியில் அவர் எடுத்த விபரீத முடிவு!

Hydrabad Crime News : ஹைதராபாத்தில் தனது இரு மகன்களையும் கத்தியால் கொலை செய்துவிட்டு, தாயும் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் தேஜா மற்றும் இரு குழந்தைகளும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததால், இந்த சம்பவம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், தேஜாவின் அறையில் 7 பக்க கடிதத்தையும் போலீசார் மீட்டுள்ளனர்

கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்.. கடைசியில் அவர் எடுத்த விபரீத முடிவு!

மாதிரிப்படம்

Updated On: 

19 Apr 2025 11:13 AM

ஹைதராபாத், ஏப்ரல் 19: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2 மகள்களை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தனது 2 மகள்கனை கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம்  ஜீடிமெட்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஜுலராமரம் பகுதியில் நடந்துள்ளது. கஜுலராமரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 35 வயதான தேஜா. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்

இந்த நிலையில், 2025 ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 4 மணியளவில் 11 வயது மகன் அர்ஷித் ரெட்டி, 6 வயது மகன் ஆஷிஷ் ரெட்டி ஆகியோரை தேஜா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும், அங்கு ரத்து வெள்ளத்தில் கிடந்த இரண்டு குழந்தைகளையும், தேஜாவையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அந்த பெண்ணின் வீட்டில் சோதனையிட்டதில் 7 பக்க கடிதமும் சிக்கியுள்ளது. அதில், அந்த தேஜா மற்றும் குழந்தைகள் உடல்நலப் பிரச்னை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதனால், பெண் தேஜா மன உளைச்சலில் இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடைசியில் அவர் எடுத்த விபரீத முடிவு

மேலும், தனது கணவர் மீது கோபத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, தனது இரு மகன்களையும் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கூட, ஹைதராபாத்தில் மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி கணவர் குக்கரில் வேகவைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், சில உடல் பாகங்களை ஏரியில் வீசியும்  இருக்கிறார். முன்னாள் ராணுவ வீரர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார்.

பெண்ணின் குடும்பத்தினர் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

(தற்கொலை தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)