பஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதிகளின் வீடுகள் அடுத்தடுத்து தகர்ப்பு.. இந்திய ராணுவம் அதிரடி!
Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியாக, காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் வீடுகள் கண்டுபிடித்து, அவர்களது வீடுகளை வெடி குண்டு வைத்து ராணுவம் தகர்த்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து, இதுவரை 7 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 27 : பஹல்காம் பயங்கரவாத (Pahalgam Terror Attack) தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் வீடுகளை வெடி வைத்து ராணுவம் தகர்த்தி வருகிறது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உட்பட ஏழு பயங்கரவாதிகளின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்துள்ளது.
பயங்கரவாதிகளின் வீடுகள் அடுத்தடுத்து தகர்ப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து புல்வாமா, ஷோபியன், அனந்த்நாக், குல்காம் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் இதுவரை ஏழு பயங்கரவாதிகளின் வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
அவர்களில் அனந்த்நாக்கில் உள்ள தோகர்பூராவைச் சேர்ந்த அடில் அகமது தோகர், புல்வாமாவில் உள்ள முர்ரானைச் சேர்ந்த அஹ்சன் உல் ஹக் ஷேக், டிராலில் இருந்து ஆசிப் அஹ்மத் ஷேக், சோபியானில் சோட்டிபோராவைச் சேர்ந்த ஷாஹித் அகமது குட்டாய் மற்றும் குல்காமில் உள்ள மதல்ஹாமாவைச் சேர்ந்த ஜாஹித் அகமது கானி ஆகியோரின் வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளன.
இந்த பயங்கரவாதிகள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர்கள், தற்போது ஜம்மு-காஷ்மீரில் தலைமறைவாக உள்ளனர். பயங்கரவாதிகளின் வீடுகளை இடிப்பது என்பது பயங்கரவாதிகளை அழிக்கு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருப்பதாகவும், அவரை அழிக்கும் நடவடிக்கை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய ராணுவம் அதிரடி
VIDEO | House of terrorist Zakir Ahmad Ganie Razed, who was allegedly involved in Pahalgam terror attack, was blown up in Jammu and Kashmir’s Kulgam. Visuals from the spot.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/N2WdnOG0Ir
— Press Trust of India (@PTI_News) April 26, 2025
இதில் குறிப்பாக, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வீடுகளும் தகர்க்கப்பட்டுள்ளன. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சுற்றுலா பயணிகள். சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.