அச்சச்சோ.. ஹாட் ஏர் பலூனில் இருந்து கீழே விழுந்து இளைஞர் பலி.. நடந்தது என்ன?
Rajasthan Hot Air Balloon Accident: ஹாட் ஏர் பலூனில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கோட்டாவைச் சேர்ந்த வாசுதேவ் காத்ரி (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஹாட் ஏர் பலூனை இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.

ராஜஸ்தான், ஏப்ரல் 10: ராஜஸ்தானில் ஹாட் ஏர் பலூனில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்துள்ளது. இன்றைய காலத்தில் பலரும் ஹாட் ஏர் பலூனில் பயணம் செய்ய விரும்புகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயணம் செய்ய விரும்புகின்றனர். அதே நேரத்தில் இந்த ஹாட் ஏர் பலூனால் சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
ஹாட் ஏர் பலூனில் இருந்து கீழே விழுந்து இளைஞர் பலி
இந்த நிலையில், ராஜஸ்தானில் ஹாட் ஏர் பலூனில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் கோட்டாவைச் சேர்ந்த வாசுதேவ் காத்ரி (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பரான் நகரின் நடந்துள்ளது.
பரான் நகரில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, காலை 7 மணியளவில் ஹாட் ஏர் பலூனுக்கான சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது, ஹாட் ஏர் பலூன் ஒன்றில் வாசுதேவ் காத்ரி பயணம் செய்தார். அப்போது, திடீரென அந்த பலூனில் இருந்த கயிறு அறுந்து விழுந்தது.
100 அடி உயரம் வரை சென்று அந்த பலூனில் திடீரென கயிறு அறுந்தது. இதனால் வாசுதேவ் கீழே விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் வாசுதேவ் காத்ரியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
நடந்தது என்ன?
राजस्थान में हॉट एयर बैलून शो…!
80 फीट की ऊंचाई से रस्सी टूटने से गिरा युवक। pic.twitter.com/cT6sJAV5jR— Arpit Sharma (@Arpit_Dbhaskar) April 10, 2025
உயிரிழந்த காத்ரி பல வருடங்களுக்கு ஹாட் ஏர் பலூனை இயக்குவதில் வல்லவர். இவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின்போது ஹாட் ஏர் பலூனில் இருந்த கயிறு அறுந்து விழுந்ததால் காத்ரி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவத்திற்கான காரணத்தையும் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, 2025 பிப்ரவரி மாதத்தில் பிரயாக்ராஜில் நடந்த மகாகும்ப மேளாவில் ஹாட் ஏர் பலூன் வெடித்ததில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். வெப்பக் காற்று பலூன் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. அப்போது, அதில் அருந்த ஆறு பேரும் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.