ஹிமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்.. மியான்மர், தஜிகிஸ்தானிலும் உணரப்பட்டது!
Himachal Pradesh Earthquake | ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று (ஏப்ரல் 13, 2025) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர், தஜிகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த பகுதியில் எந்த அளவில் நிலடுக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஹிமாச்சால பிரதேசம், ஏப்ரல் 13 : ஹிமாச்சல பிரதேசத்தில் (Himachal Pradesh) இன்று (ஏப்ரல் 13, 2025) காலை லேசான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமன்றி அண்டை நாடுகளான மியான்மர் (Myanmar) மற்றும் தஜிகிஸ்தான் (Tajikistan) பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த பகுதிகளில் எவ்வளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
ஹிமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 13, 2025) காலை 9.19 மணி அளவில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது, 3.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழம் கொண்டு இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பீதியில் உறைந்த நிலையில், ரிக்டர் அளவு மிகவும் குறைவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், பெரிதாக எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் எக்ஸ் பதிவு
EQ of M: 3.4, On: 13/04/2025 09:18:25 IST, Lat: 31.49 N, Long: 76.94 E, Depth: 5 Km, Location: Mandi, Himachal Pradesh.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/tzhr2P26IT— National Center for Seismology (@NCS_Earthquake) April 13, 2025
மியான்மர் நிலநடுக்கம்
மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அங்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. மிகப்பெரிய கட்டடங்களும் இந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்து தரைமட்டமான நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மியான்மரில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3,500 கடந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 13, 2025) மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மியான்மரில் 5.1 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்
EQ of M: 5.1, On: 13/04/2025 07:54:58 IST, Lat: 21.13 N, Long: 96.08 E, Depth: 10 Km, Location: Myanmar.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Fr8qprdNdt— National Center for Seismology (@NCS_Earthquake) April 13, 2025
ஹிமாச்சல பிரதேசம், மியான்மர் மட்டுமன்றி தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 13, 2025) காலை, 9.54 மணி அளவில் அங்கு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.