Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரிந்த காதலனின் மிரட்டலால் மனமுடைந்த ஆசிரியை… பின்னர் நடந்த துயரம்…!

Threatened Before Marriage: தன் முன்னாள் காதலனின் மிரட்டல்களால் மனமுடைந்த ஆசிரியை சாய்ராபானு, திருமணத்துக்கு முன்னதாகவே துயரமான முடிவை எடுத்து விட்டார். ஐந்து ஆண்டுகள் காதலித்து பிரிந்த காதலனின் ஆத்திரம், அவரது புதிய வாழ்க்கையை தொடங்கியதற்கு இடையூறாக அமைந்தது. இந்த துயர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரிந்த காதலனின் மிரட்டலால் மனமுடைந்த ஆசிரியை… பின்னர் நடந்த துயரம்…!
பிரிந்த காதலனின் மிரட்டலால் மனமுடைந்த ஆசிரியைImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 23 Apr 2025 13:15 PM

கர்நாடகா ஏப்ரல் 23: கதக் மாவட்டத்தில், ஆசிரியை சாய்ராபானு (Teacher Saira Bhanu) தனது முன்னாள் காதலனின் மிரட்டலால் விபரீத முடிவை எடுத்தார். ஐந்தாண்டுகளாக காதலித்து பிரிந்தபின், அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் (Ex-boyfriend) தொடர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மனமுடைந்த சாய்ராபானு வீட்டில் விபரீத முடிவை எடுத்தார். உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய அவர், புதிய வாழ்க்கையை தொடங்க தயாராக இருந்தார். புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை (Police have registered a case and are investigating) நடத்தி வருகின்றனர்.

முன்னாள் காதலனின் மிரட்டல் காரணமாக விபரீத முடிவை எடுத்த ஆசிரியை

கதக் மாவட்டத்தில், சாய்ராபானு என்ற ஆசிரியை தனது முன்னாள் காதலனின் மிரட்டல் காரணமாக விபரீத முடிவை எடுத்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாய்ராபானுவுக்கும் அவரது காதலனுக்கும் இடையே ஐந்து வருடங்களாக காதல் இருந்துள்ளது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், சாய்ராபானுவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன், அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாய்ராபானு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதிய வாழ்க்கையைத் தொடங்க இருந்த சாய்ராபானு

சாய்ராபானு ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தனது புதிய வாழ்க்கையைத் தொடங்க தயாராக இருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாய்ராபானுவின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தபோது, அவர் வீட்டில் விபரீத முடிவை எடுத்தார். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் குறித்து புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் காதலனின் மிரட்டல்கள் காரணமாகவே சாய்ராபானு விபரீத முடிவை எடுத்துக்கொண்டாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் வந்தால் தமிழ்நாடு உதவி எண்

தற்கொலை எண்ணங்கள் வந்தால், உடனடியாக உதவி தேடுவது மிகவும் முக்கியமானது. கீழே சில பயனுள்ள செயல்கள்:

உறுதிமிக்க நபரிடம் பேசுங்கள் – நம்பிக்கையுள்ள நண்பர், குடும்பத்தினர், அல்லது ஆசிரியரை தொடர்புகொள்ளுங்கள். பேசுவது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

தகுந்த மனநல ஆலோசகரை நாடுங்கள் – மனநல மருத்துவர் அல்லது ஆலோசகர் தன்னம்பிக்கையை வளர்க்கும் வழிகளை வழங்குவார்கள்.

உடனடி உதவி தேடுங்கள் – தற்கொலை தடுப்பு உதவி மையங்களை (helplines) தொடர்புகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு மனநல ஆலோசனை ஹெல்ப்லைன்:

104 – 24×7 மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ ஆலோசனை

தமிழில் உதவி வழங்கப்படும்.

AASRA (தேசிய தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன்):

+91-9820466726

24 மணி நேரமும் கிடைக்கும், தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளிலும் உதவிக்கரம் நீட்டுவர்.

Snehi (மனநல ஆதரவு சேவை):
+91-9582208181

அட்டக்கத்தி தினேஷின் நடிப்பை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
அட்டக்கத்தி தினேஷின் நடிப்பை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்...
துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சு!
துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சு!...
செம்பருத்தி பூ – இயற்கையின் அருட்கொடை மற்றும் மருத்துவ அற்புதம்!
செம்பருத்தி பூ – இயற்கையின் அருட்கொடை மற்றும் மருத்துவ அற்புதம்!...
30 வயதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? ரூ.1 கோடி பெறுவது எப்ப
30 வயதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? ரூ.1 கோடி பெறுவது எப்ப...
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உலக தலைவர்களின் கண்டனங்கள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உலக தலைவர்களின் கண்டனங்கள்...
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது ஆரம்பம்?
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது ஆரம்பம்?...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்! ஐபிஎல்லில் 2 முக்கிய விஷயங்கள் தடை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்! ஐபிஎல்லில் 2 முக்கிய விஷயங்கள் தடை...
உங்க கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கணுமா? அப்போ இந்த தப்ப பண்ணாதீங்க!
உங்க கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கணுமா? அப்போ இந்த தப்ப பண்ணாதீங்க!...
எங்க அப்பா அவர் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றாறு... பிரேம்ஜி
எங்க அப்பா அவர் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றாறு... பிரேம்ஜி...
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்... மௌனம் கலைத்த பாகிஸ்தான்!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்... மௌனம் கலைத்த பாகிஸ்தான்!...