Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வடமாநிலங்களில் கனமழை பேரழிவு: ஏப்ரல் 15-ல் தீவிரமடையும் மழை …!

Heavy Rains lash Northern States: வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி, பீஹார், உ.பி., ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 102 பேர் உயிரிழந்துள்ளனர். பீஹாரில் 80 பேர், உ.பி.-யில் 22 பேர், பாட்னாவில் மட்டும் மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளன. ஜார்க்கண்டில் மரங்கள் முறிந்து விழுந்தும், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயிகள் அவதிக்குள்ளாகியும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் கனமழை பேரழிவு: ஏப்ரல் 15-ல் தீவிரமடையும் மழை …!
வடமாநிலங்களில் கனமழைImage Source: PTI
sivasankari-bose
Sivasankari Bose | Published: 12 Apr 2025 08:16 AM

வடமாநிலங்களில் கனமழை: பீஹார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பீஹாரில் மட்டும் இடி மற்றும் ஆலங்கட்டி மழையால் 80 பேர் உயிரிழந்துள்ளனர்; நிவாரணமாக ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன; விவசாய நிலங்களில் நீர் தேங்கி விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். பாட்னாவில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார், உ.பி. மற்றும் ஜார்க்கண்டில் கனமழை பாதிப்பு

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வானிலை மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. வெயில் வாட்டி வந்த நிலையில் அந்தப் பகுதியில் தற்போது கனமழை கொட்டித் தீர்க்கிறது. குறிப்பாக, பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கனமழை பரவலாகப் பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் பலரும் உயிரிழப்பை சந்திக்க வித்துத்துள்ளது.

பீஹாரில் மழை பாதிப்பு அதிகம்

பீஹார் மாநிலம் மழைக்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இடி மற்றும் ஆலங்கட்டி மழையின் காரணமாக இந்த மாநிலத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.4 லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ளார்.

பாட்னாவில் மின்னல் தாக்கி உயிரிழப்புகள்

பாட்னா நகரில், கனமழை பெய்ததில், மழைநீர் தேங்கி அதன் பின்னணியாக மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக பல உயிரிழப்புகள் சம்பவமாகி உள்ளன.

மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு

“>

 

உ.பி.யிலும் மழை தாக்கம்

உ.பி.யில் மழை 22 பேர் உயிரிழந்துள்ளனர். பதேபூர், ஆசம்கர்க், பெரோசாபாத், சிதாபூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை ஏற்படுத்திய இடி மற்றும் ஆலங்கட்டி மழை பாதிப்பால் மக்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர். இத்தகைய பாதிப்புகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் மழை பாதிப்புகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத், கோடர்மா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெகுவாக பெய்து, பல மரங்கள் முறிந்துள்ளன. விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வானிலை எச்சரிக்கை

பீஹாரின் வடக்கு பகுதிகளுக்கு 2025 ஏப்ரல் 15-ம் தேதி ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்

பீஹார், உ.பி. மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மழையின் தாக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர்கள் நிதிஷ் குமார் மற்றும் யோகி ஆதித்யநாத் இழப்பீடு அறிவித்துள்ளன.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...