டார்ச்சர் செய்த வருங்கால மனைவி.. உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்.. சோக சம்பவம்!

Fiancee's mental torture leads man to kill himself | மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், தனது வருங்கால மனைவி கொடுத்த மன அழுத்தம் காரணமாக அந்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டார்ச்சர் செய்த வருங்கால மனைவி.. உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்.. சோக சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Published: 

21 Apr 2025 08:37 AM

மகாராஷ்டிரா, ஏப்ரல் 21 :  மகாராஷ்டிராவில் வருங்கால மனைவியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் தனியாக வசித்து வந்த நிலையில், அவர் உயிரிழந்து 3 முதல் 4 நாட்களுக்கு பிறகு தான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, இளைஞரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது வருங்கால மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வருங்கால மனைவியால் இளைஞர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டார்ச்சர் செய்த வருங்கால மனைவி – உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஹரேராம் சத்தியபிரகாஷ் பாண்டே. 36 வயதாகும் இவர், வருமான வரித்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு வாரணாசி பகுதியை சேர்ந்த மோஹினி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆனால், நிச்சயதார்த்தத்தின் போது மோஹினி தனது காதலனை கட்டி பிடித்துக்கொண்டிருப்பதை ஹரேராம் பார்த்துள்ளார். இதனால் கடும் மன உலைச்சலுக்கு ஆளான அவர், தனது காதலன் உடனான தொடர்பை துண்டித்தால் மட்டுமே திருமணம் செய்துக் கொள்வேன் என்று மோஹினி இடம் கூறியுள்ளார்.

ஆனால், அந்த பெண்ணோ அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, இந்த விவகாரத்தை ஹரேராம் வெளியே சொல்லிவிட கூடாது என்பதற்காக அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்வேன் என்றும் மிரட்டி வந்துள்ளார். இவ்வாறு அந்த பெண் தொடர்ந்து கூறி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அது ஹரேராமுக்கு மன அழுத்தமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அவர் தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

4 நாட்களுக்கு பிறகு தெரிய வந்த தற்கொலை

ஹரேராமின் வீட்டின் வெளியே மூன்று முதல் 4 நாட்கள் பழை பால் பாக்கெடுக்கள் கிடந்த நிலையில், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஹரேராமின் உடலை தேடியுள்ளனர். இந்த நிலையில், ஹரேராமின் சகோதரர், ஹரே கிருஷ்ண பாண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அதீத மன அழுத்தம் காரணமாக ஹெரேராம் இந்த முடிவை எடுத்ததாகவும், அதற்கு மோஹினி மற்றும் அவரது காதலன் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து மோஹினி மற்றும் அவரது காதல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.