இந்த ஆப் போதும்… இனி ஆதார் கார்டு தேவையில்லை..! நொடியில் முடியும் வேலை…
முக அடையாள அடிப்படையில் ஆதார் சரிபார்ப்பு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆதார் கார்டை பிரின்ட் எடுத்து காட்ட வேண்டிய தேவை இனி இல்லை. QR கோட் ஸ்கேன் செய்து, முகத்தை ஸ்கேன் செய்வதன்மூலம் ஆதார் விவரங்கள் பகிர முடியும். பயனர்களின் ஒப்புதலுடன் மட்டுமே சரிபார்ப்பு நடைபெறும், தனியுரிமை பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது

டெல்லி ஏப்ரல் 09: மத்திய அரசு (Central Government) அறிமுகம் செய்துள்ள புதிய வசதியால், இனிமேல் ஆதார் கார்டை பிரின்ட் அவுட் எடுத்து பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் விவரங்கள் தேவைப்படும் இடங்களில், அதன் நகல் மற்றும் எண்ணை அளிப்பதற்குப் பதிலாக, நம் முகத்தைக் காட்டினாலே போதுமானதாகும் என இந்த புதிய வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆதார் செயலியில் அறிமுகம் (Introduction to Aadhaar app) செய்யப்பட்டுள்ள இந்த முக அடையாள அடிப்படையிலான வசதி தற்போது சோதனை முறையில் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Union IT Minister Ashwini Vaishnav) தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனை (UPI Money Transfer) செயலிகளைப் போல், ஆதார் செயலியிலும் க்யூஆர் கோட் இடம் பெற்றிருக்கும். இதனை ஆதார் விவரங்கள் தேவைப்படும் இடங்களில் ஸ்கேன் செய்தால், உடனடியாக கேமரா மூலமாக நம் முகத்தை ஸ்கேன் செய்து, ஆதார் தகவல்களை உறுதிப்படுத்தும் வசதி செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆதார் கார்டை இனி பிரின்ட் அவுட் எடுத்து பயன்படுத்த வேண்டியதில்லை
மத்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய அறிவிப்பின் மூலம், ஆதார் கார்டை இனி பிரின்ட் அவுட் எடுத்து பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் தகவல்கள் தேவைப்படும் இடங்களில் அதன் நகலைக் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லாமல், நம் முகத்தைக் காட்டினாலே போதுமானதாகும் என புதிய டிஜிட்டல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புது தில்லியில் டெல்லியில் அறிமுகம்
இந்த புதிய முக அடையாள அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பு முறையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புது தில்லியில் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், ஆதார் செயலியில் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்வதுடன், கேமரா மூலமாக முகத்தை ஸ்கேன் செய்து நம்பிக்கையான முறையில் ஆதார் விவரங்களை பகிர முடியும். இதனுடன் ஆதார் செயலியில் இப்போது UPI போன்ற பரிமாற்ற செயலிகள் போலவே செயல்படும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
நொடியில் முடியும் வேலை…
Union Minister Ashwini Vaishnaw tweets, “Aadhaar verification becomes as simple as making UPI payment. Users can now digitally verify and share their Aadhaar details while ensuring their privacy. Simply scan a QR code or use a requesting application” pic.twitter.com/9C1pjb7t4F
— ANI (@ANI) April 8, 2025
“>
பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பும் உறுதி
இந்த புதிய வசதி, ஹோட்டல்கள், விமான நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஆதார் புகைப்பட நகலை ஒப்படைக்க வேண்டிய தேவையை முழுமையாக நீக்குகிறது. பயனர் ஒப்புதலுடன் மட்டுமே இந்த சரிபார்ப்பு நடைபெறும் என்பதோடு, பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்கால இந்தியாவுக்கான புதிய வாயிலாக அமையும்: அமைச்சர்
இது, டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றமாகவும், பாதுகாப்பான மற்றும் பயனர் கட்டுப்பாடுள்ள அடையாள அடிப்படையிலான சேவையாகவும் மாறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு, எதிர்கால இந்தியாவுக்கான புதிய வாயிலாக அமையும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆதார் செயலியின் முக்கிய 10 அம்சங்கள்!
புதிய ஆதார் செயலி வந்துவிட்டது! தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இது பல முன்னேற்றங்களை கொண்டுள்ளது. இதோ, அந்த 10 சிறப்பம்சங்கள்:
தகவல் பகிர்வில் பாதுகாப்பும் ஒப்புதலும்: பயனாளர்கள், தங்களுக்குத் தேவையான தகவல்களை மட்டுமே பாதுகாப்பாக பகிர முடியும். அதற்கான ஒப்புதல் அவசியம்.
QR கோடு மூலம் தற்சார்பு சரிபார்ப்பு: UPI போலவே, ஆதார் சரிபார்ப்பு இனி QR கோடு ஸ்கேன் செய்வதன்மூலம் எளிதாகச் செய்யலாம்.
ஸ்கேன் அல்லது பிரிண்ட் தேவையில்லை: ஆதார் கார்டின் பிரிண்ட் எடுத்துப் போட வேண்டிய காலம் முடிந்தது!
முக அடையாள அங்கீகாரம்: செயலியில் Face ID மூலம் அடையாளம் உறுதி செய்யும் புதிய வசதி.
ஓட்டல்கள், கடைகள், செக் பாயிண்ட்களில் போட்டோகாபி தேவையில்லை: உங்கள் ஆதார் நகலை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
முழுமையான டிஜிட்டல் பாதுகாப்பு: இந்த செயலி 100% டிஜிட்டல் அடையாள பரிசோதனையை வழங்குகிறது.
தகவல் கசியல், தவறான பயன்பாடுகள் தடுக்கப்படும்: உங்கள் ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு.
பிறர் தள்ளப்பட முடியாத பாதுகாப்பு: ஆதார் விவரங்களை மாற்றம் செய்வது அல்லது போலி ஆவணங்கள் உருவாக்குவது முற்றிலும் தடுக்கப்படும்.
சுலபமான சரிபார்ப்பு: விரைவான மற்றும் எளிதான அடையாள சரிபார்ப்பு அனுபவம்.
முன்னேறிய தனியுரிமை பாதுகாப்பு: பாரம்பரிய முறைகளைவிட பலமடைந்த தனியுரிமை பாதுகாப்பு அம்சங்கள்.