Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”ரத்தம் கொதிக்கிறது” பஹல்காம் தாக்குதல்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் கொதித்தெழுந்த பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீல் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை மிகப்பெரிய பலமாகும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

”ரத்தம் கொதிக்கிறது” பஹல்காம் தாக்குதல்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் கொதித்தெழுந்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Apr 2025 12:21 PM

ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 27 : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) குறித்து பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.  அதாவது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.  2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள்   தாக்குதல் நடத்தியல் 26 பேர் கொல்லப்பட்டனர்.   இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக நாடுகளல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என பிரதமர் மோடி கூறி வருகிறார். மேலும், பயங்கரவாதிகள் தேடும் பணியில் இந்திய ராணுவமும் ஈடுபட்டு வருகிறது.

பஹல்காம் தாக்குதல்

இந்த நிலையில், 2025 ஏப்ரல் 27ஆம் தேதியான இன்று நடந்த மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி பஹல்காம் தாக்குதல் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் கோழைத்தனத்தையும் காட்டுகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு கொண்டு இருந்தது. ஜனநாயகம் வலுவடைந்து வந்தது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருமானமும் அதிகரித்து வந்தது. இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வந்தன.

நாட்டின் எதிரிகளுக்கு ஜம்மு காஷ்மீர் வளர்வது பிடிக்கவில்லை. ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும், அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பேசும் மொழியைப் பொருட்படுத்தாமல் அனைவரும் வேதனை அடைந்தனர்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் கொதித்தெழுந்த பிரதமர் 


என் இதயத்தில் ஆழ்ந்த வேதனை உள்ளது. பயங்கரவாத தாக்குதலின் படங்களைப் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியரின் இரத்தமும் கொதிக்கிறது என்பதை நான் உணர்கிறேன். உலகமே இந்தியாவுடன் உள்ளது. துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை மிகப்பெரிய பலமாகும். இந்த ஒற்றுமைதான் பயங்கரவாதத்திற்கு எதிரான நமது தீர்க்கமான போரின் அடிப்படை. இந்த சவாலை எதிர்கொள்ள நமது கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும். ஒரு தேசமாக நமது மன உறுதியைக் காட்ட வேண்டும்” என்று கூறினார்.

கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!
கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!...
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!...
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!...
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!...
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!...
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்...
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா..
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா.....
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்...
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?...
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!...
பட்டையை கிளப்பிய மும்பை.. பரிதாபமாக தோற்ற லக்னோ!
பட்டையை கிளப்பிய மும்பை.. பரிதாபமாக தோற்ற லக்னோ!...